ஆஸ்கர் விருதை தொடர்ந்து கிராமி விருதையும் தட்டிச்சென்ற இந்திய வம்சாவளி தயாரிப்பாளர்!

அமெரிக்காவில் வாழும் இந்திய வம்சாவளியரான ஜோசப் பட்டேல் தயாரித்த “சம்மர் ஆப் சோல்” படத்துக்கு கிராமி விருது அளிக்கப்பட்டது.
ஆஸ்கர் விருதை தொடர்ந்து கிராமி விருதையும் தட்டிச்சென்ற இந்திய வம்சாவளி தயாரிப்பாளர்!
Published on

லாஸ் வேகாஸ்,

இசை உலகின் உயரிய விருதாக கருதப்படும் கிராமி விருது வழங்கும் விழா ஆண்டுதோறும் நடத்தப்பட்டு வருகிறது. 2022-ம் ஆண்டுக்கான 64-வது கிராமி விருது வழங்கும் விழா அமெரிக்காவின் லாஸ் வேகாஸில் நடந்தது.

இந்த விழாவில், அமெரிக்காவில் வாழும் இந்திய வம்சாவளியரான ஜோசப் பட்டேல் தயாரித்த சம்மர் ஆப் சோல் படத்துக்கு கிராமி விருது அளிக்கப்பட்டது. சிறந்த இசைப் படம் பிரிவில் விருதை தட்டி சென்றது.

இந்த படத்தை ராபர்ட் பைவோலெண்ட் மற்றும் டேவிட் டின்னர்ஸ்டெய்ன் ஆகியோருடன் இணைந்து ஜோசப் பட்டேல் தயாரித்தார்.

முன்னதாக ஆஸ்கர் விருதும் இந்த படத்துக்கு கொடுக்கப்பட்டது. அப்போது அவருடன் சேர்ந்து விருதை பெறுவதற்காக படக்குழுவை சேர்ந்த 3 கறுப்பின நபர்கள் ஆஸ்கர் மேடையில் ஏறினர்.

ஆஸ்கர் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கிய நடிகர் கிறிஸ் ராக் அப்போது, 4 வெள்ளையர்கள் இப்போது மேடைக்கு வருகிறார்கள் என்று அவரையும் சேர்த்து கேலியாக குறிப்பிட்டார்.

வெற்றி பெற்றவர்கள் பெயரை அட்டையிலிருந்து பிரித்து கிறிஸ் ராக் படிக்கும்போது, இந்த பிரிவில் வெற்றியாளர் 'சம்மர் ஆஃப் சோல்... அதன் இயக்குனர் அஹ்மிர் குவெஸ்ட்லோவ் தாம்சன் மற்றும் 4 வெள்ளை தோழர்கள் என்று வாசித்தார்.

அதாவது ஜோசப் பட்டேல் உட்பட அவர்கள் 4 பேரும் கறுப்பாக உள்ளவர்கள் என்பதை கிறிஸ் ராக் கேலியாக குறிப்பிட்டார்.கிறிஸ் ராக்கின் இந்த பேச்சால், தான் மிகுந்த கோபமடைந்ததாக ஜோசப் பட்டேல் தெரிவித்தார்.

இதுகுறித்து அவர் டுவிட்டரில் தெரிவித்ததாவது,

என்னை கடும் கோபத்திற்கு உள்ளாக்கியதற்கான காரணம், ஆசியாவிலிருந்து ஆஸ்கர் விருதை பெறும் 3வது நபர் என்று பெருமைப்பட்டேன். என்னுடன் சேர்ந்து 2 ஆசிய நபர்கள் என மொத்தம் மூவர் ஒரே இரவில் ஆஸ்கர் விருது பெற்றோம். இது ஒரு வரலாறு ஆகும்.

இவ்வாறு அவர் தெரிவித்தார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com