’அந்த விஷயத்தில் நான் நிறைய போராடியுள்ளேன்’ - ஜான்வி கபூர்

பாலிவுட்டில் ஆண் ஈகோவை சமாளிக்க தான் 'முட்டாள்' வேடம் போடுவதாக ஜான்வி கபூர் கூறினார்.
Janhvi Kapoor Admits She ‘Plays Dumb’ To Deal With Male Egos In Bollywood
Published on

சென்னை,

திரைத்துறையில் ஆண் ஆதிக்கத்தை எதிர்கொள்ள வேண்டும் என்றும், இந்த விஷயத்தில் தான் நிறைய போராடியுள்ளதாகவும் ஜான்வி கபூர் தெரிவித்தார்.

டூ மச் வித் கஜோல் அண்ட் டுவிங்கிள் என்ற நிகழ்ச்சியில் திரைத்துறையில் தான் சந்தித்த சில பிரச்சினைகள் குறித்து ஜான்வி கபூர் கூறிய கருத்துகள் விவாதப் பொருளாகியுள்ளன.

"நான் திரைப்பட பின்னணி கொண்ட குடும்பத்திலிருந்துலிருந்து வந்திருந்தாலும், இங்கு வந்த பிறகு சில புதிய விஷயங்களைக் கற்றுக்கொண்டேன். திரைத்துறையில் சிறந்து விளங்க, நீங்கள் ஆண் ஆதிக்கத்தை எதிர்கொள்ள வேண்டும். இந்த விஷயத்தில் நான் நிறைய போராடியிருக்கிறேன்.

நான்கு பெண்கள் இருக்கும் இடத்தில் என் கருத்தை நான் தைரியமாக வெளிப்படுத்த முடியும். ஆனால் அந்த இடத்தில் நான்கு ஆண்கள் இருந்தால், கருத்தை என்னால் சுதந்திரமாக வெளிப்படுத்த முடியாது. சில நேரங்களில் அமைதியாக இருக்க வேண்டியிருக்கும். இது போன்ற அரசியலை நான் நிறைய எதிர்கொண்டிருக்கிறேன்" என்றார்.

நிகழ்ச்சியின் வர்ணனையாளராக இருக்கும் டுவிங்கிள் கன்னாவும் 90களில் இதே போன்ற சூழ்நிலைகளை எதிர்கொண்டதாகக் கூறினார்

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com