வில்லன் வேடத்தை விரும்பும் ஜெயம்ரவி

வில்லன் வேடத்தை விரும்பும் ஜெயம்ரவி
Published on

மணிரத்னம் இயக்கத்தில் விக்ரம், கார்த்தி, ஜெயம் ரவி, பிரபு, பார்த்திபன், ஜஸ்வர்யா ராய், திரிஷா, ஜஸ்வர்யா லட்சுமி உள்ளிட்டோர் நடித்துள்ள பொன்னியின் செல்வன் 2-ம் பாகம் திரைக்கு வருகிறது. இந்த படத்தை விளம்பரப்படுத்தும் நிகழ்ச்சி பெங்களூருவில் நடந்தது.

இதில் நடிகர் ஜெயம் ரவி பங்கேற்று பேசும்போது, "திரைப்படங்களில் நல்லவன் கதாபாத்திரங்களில் நடிக்க நான் விரும்புவது இல்லை. காரணம் அதில் ஒரே மாதிரியான நடிப்பைத்தான் வெளிப்படுத்த முடியும். வில்லன் வேடங்கள் அப்படி அல்ல. கெட்டவனாக நடிக்கும்போது நடிப்பு திறமையை சிறப்பாக வெளிப்படுத்த முடியும்.

பொன்னியின் செல்வன் படத்தில் ராஜராஜ சோழனாக எப்படி நடிக்க வேண்டும் என்று மணிரத்னம் நிறைய விஷயங்களை சொல்லி கொடுத்தார். இந்த கதாபாத்திரத்தில் நடிக்க நான் யாரையும் காப்பி அடிக்கவில்லை. ஏற்கனவே சிவாஜி கணேசன் ராஜராஜசோழனாக நடித்து இருக்கிறார். அந்த படத்தை பார்க்காமல்தான் நடித்தேன். அதை பார்த்து இருந்தால் அவருடைய நடிப்பின் தாக்கம் எனக்குள் வந்து இருக்கும். எனது நடிப்பு அவர் நடிப்பிற்கு 10 சதவீதம் கூட ஈடு ஆகாது. என்னால் எப்படி முடியுமோ அப்படி நடித்தேன்'' என்றார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com