காஜல் அகர்வால் கர்ப்பம்?

தமிழ், தெலுங்கு திரையுலகில் முன்னணி கதாநாயகியாக இருக்கும் காஜல் அகர்வால் கடந்த வருடம் தொழில் அதிபர் கவுதம் கிச்சலுவை காதல் திருமணம் செய்து கொண்டார். திருமணத்துக்கு பிறகும் படங்களில் நடித்து வருகிறார்.
காஜல் அகர்வால் கர்ப்பம்?
Published on

தமிழில் பாரிஸ் பாரிஸ், ஹேய் சினாமிகா, கருங்காப்பியம், கோஷ்டி ஆகிய படங்களில் நடித்து முடித்துள்ளார். தெலுங்கில் சிரஞ்சீவியுடன் ஆச்சார்யா மற்றும் கோஸ்ட் படங்களில் நடிக்கிறார். கமல்ஹாசன் ஜோடியாக நடிக்கும் இந்தியன் 2 படப்பிடிப்பு தாமதமாகி உள்ளது.

கணவர் விரும்பினால் சினிமாவை விட்டு விலகிவிடுவேன் என்று ஏற்கனவே தெரிவித்து இருந்தார். இந்த நிலையில் 36 வயதாகும் காஜல் அகர்வால் கர்ப்பமாக இருப்பதாக தெலுங்கு இணைய தளங்களில் தகவல் பரவி உள்ளது. இதையடுத்து ரசிகர்கள் பலரும் அவருக்கு வாழ்த்து தெரிவித்து வருகிறார்கள். காஜல் அகர்வால் தற்போது சினிமாவில் இருந்து தற்காலிக ஓய்வு எடுத்து இருப்பதாக கூறப்படுகிறது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com