’கருப்பு’ - சூர்யா ரசிகர்களுக்கு சஸ்பென்ஸை எகிற வைத்த சாய் அபயங்கர்


Karuppu - ​​Sai Abhyankkar creates suspense for Suriya fans
x

கருப்பு படத்தின் முதல் பாடல் தீபாவளிக்கு வெளியாகும் என்று இயக்குனர் ஆர்.ஜே.பாலாஜி கூறி இருந்தார்.

சென்னை,

நடிகர் சூர்யா ரசிகர்களுக்கு சஸ்பென்ஸை எகிற வைக்கும் விதமாக இசையமைப்பாளர் சாய் அபயங்கர் ஒரு அப்டேட்டை பகிர்ந்துள்ளார். அவர் தனது எக்ஸ் பக்கத்தில் ’சரவெடி ஆயிரம் பத்தனுமா #கருப்பு’என்று பதிவிட்டுள்ளார்.

இதை பார்த்த ரசிகர்கள் உற்சாகத்தில் உள்ளனர். முன்னதாக கருப்பு படத்தின் முதல் பாடல் தீபாவளிக்கு வெளியாகும் என்று இயக்குனர் ஆர்.ஜே.பாலாஜி கூறி இருந்தார்.

தென்னிந்திய திரையுலகில் முன்னணி நடிகராக இருப்பவர் சூர்யா. இவர் ஆர்.ஜே.பாலாஜி இயக்கத்தில் டிரீம் வாரியர் பிக்சர்ஸ் தயாரிப்பில் 'கருப்பு' படத்தில் நடித்துள்ளார். இப்படத்திற்கு சாய் அபயங்கர் இசையமைத்துள்ளார். கதாநாயகியாக திரிஷா நடித்துள்ளார்.

1 More update

Next Story