கவினின் 5-வது படத்தை இயக்கும் நடன இயக்குநர் சதீஷ்

'கிஸ்' படப்பிடிப்பின் போது கவின், பிரபு, இயக்குநர் சதீஷ் மூவரும் இணைந்து எடுத்துக்கொண்ட புகைப்படம் இணையத்தில் பரவி வருகிறது.
கவினின் 5-வது படத்தை இயக்கும் நடன இயக்குநர் சதீஷ்
Published on

இளம் நாயகன் பட்டியலில் கவின் முதன்மை இடத்தில் இருக்கிறார். சின்னத்திரையில் இருந்து வெள்ளித்திரைக்கு வந்தவர்களில் இவரும் ஒருவர். கவின் விஜய் டி.வி-யில் புகழ் பெற்ற கனா காணும் காலங்கள் சீரியலின் மூலம் சின்னத்திரை பயணத்தை துவங்கினார். பின் 'சரவணன் மீனாட்சி' சீரியலில் வேட்டையனாக வந்து மக்கள் அனைவரையும் கவர்ந்தார். இதனால் கவினுக்கு ரசிகர்கள் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே சென்றது.

பின்னர், கவின் 'நட்புனா என்ன தெரியுமா' படத்தில் கதாநாயகனாக வெள்ளித்திரைக்கு அறிமுகமாகினார். கவின் பிக்பாஸ் மூன்றாம் சீசனில் பங்கேற்றார். பிக் பாஸ் கவினுக்கு பெரிய திருப்பு முனையாக அமைந்தது. பிக்பாஸிற்கு பிறகு 'லிப்ட்' என்ற படத்தில் நடித்தார். ஓடிடி யில் மட்டும் வெளியான லிப்ட் திரைப்படம் மக்களிடம் நல்ல வரவேற்பை பெற்றது.

கணேஷ் கே பாபு இயக்கத்தில் அம்பேத் குமார் தயாரிப்பில் அபர்ணா தாஸ் மற்றும் கவின் நடிப்பில் வெளிவந்த படம் 'டாடா'. இப்படம் மக்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றது. அடுத்ததாக இளன் இயக்கத்தில் கவின் 'ஸ்டார்'படத்தில் நடித்துள்ளார். யுவன் ஷங்கர் ராஜா இப்படத்திற்கு இசையமைத்துள்ளார்.

அடுத்து கவினின் 5-வது படமாக டான்ஸ் மாஸ்டர் சதீஷ் இயக்கத்தில் வெளிவரப் போகும் படம் 'கிஸ்'. இப்படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார். படப்பிடிப்புகள் முடிவடைந்த நிலையில்.பாடல் காட்சி படப்பிடிப்பு நேற்று நடந்தது. நடிகர் பிரபு படப்பிடிப்பில் கலந்துகொண்டதாக தகவல் வெளியாகியுள்ளது. படப்பிடிப்பின் போது கவின், பிரபு, இயக்குநர் சதீஷ் மூவரும் இணைந்து எடுத்துக்கொண்ட புகைப்படம் இணையத்தில் பரவி வருகிறது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com