கேரளாவின் பழம்பெரும் நடிகர் ஜி.கே. பிள்ளை காலமானார்

கேரளாவின் பழம்பெரும் நடிகர் ஜி.கே. பிள்ளை வயது முதிர்வால் இன்று காலமானார்.
கேரளாவின் பழம்பெரும் நடிகர் ஜி.கே. பிள்ளை காலமானார்
Published on

திருவனந்தபுரம்,

கேரளாவின் திருவனந்தபுரம் நகரின் வர்கலா பகுதியை சேர்ந்த பழம்பெரும் நடிகர் ஜி.கே. பிள்ளை (வயது 97). சமீப காலங்களாக வயது முதிர்வால் உடல்நலம் பாதிப்படைந்து சிகிச்சை பெற்று வந்துள்ளார். இந்நிலையில், அவர் இன்று காலமானார்.

இந்திய ராணுவம் மற்றும் கடற்படையில் 12 ஆண்டுகள் சேவையாற்றி விட்டு அதன்பின்பு திரை துறைக்கு வந்துள்ளார். அவரது முதல் திரைப்படம் சினேகசீமா. கடந்த 1954ம் ஆண்டு வெளிவந்தது. அவரது முதல் தொலைக்காட்சி தொடர் கடமட்டத்து கத்தனார். குங்குமப்பூவு என்ற தொலைக்காட்சி தொடரில் நடித்து ரசிகர்களிடையே பிரபலம் ஆனார்.

சோழா, காரியஸ்தன் மற்றும் ஆனக்களரி ஆகியவை அவரது பிரபல திரைப்படங்கள் ஆகும். வில்லன் வேடங்களில் அதிகம் நடித்துள்ள அவர், 325 திரைப்படங்கள் மற்றும் பல்வேறு தொலைக்காட்சி தொடர்களிலும் நடித்துள்ளார். கடந்த 65 ஆண்டுகளாக திரைப்படங்கள் மற்றும் தொலைக்காட்சிகளில் நடித்து வந்துள்ளார்.

கடந்த சில ஆண்டுகளுக்கு முன் அவரது மனைவி காலமானார். அவருக்கு 3 மகன்கள் மற்றும் 3 மகள்கள் உள்ளனர். அவரது மறைவுக்கு முதல் மந்திரி பினராயி விஜயன் இரங்கல் தெரிவித்து உள்ளார். இதேபோன்று திரை பிரபலங்களும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். அவரது சொந்த ஊரில் இன்று இறுதி சடங்கு நடைபெறும்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com