

2008ஆம் ஆண்டு வெளியான 'குங்பூ பாண்டா' படவரிசையில் நான்காம் பாகமாக வெளியாகியுள்ளது 'குங்பூ பாண்டா 4'. இந்த படத்தின் முதல் மூன்று பாகங்கள் ஏற்கனவே வெளியாகி உலகெங்கும் வசூல் ரீதியாக பட்டையை கிளப்பியுள்ளது. இந்த நிலையில், குங்பூ பாண்டா திரைப்படத்தின் நான்காம் பாகம் வெளியாகியுள்ளது. படத்தின் தொடக்கமே வழக்கம்போல தனது அதிரடி சாகசங்களுடன் பாண்டா என்ட்ரி அறிமுகமாகிறது.
டிராகன் வாரியர் என்று அழைக்கப்படும் பாண்டா கரடி மற்றும் நண்பர்களின் குங்பூ சாகசங்கள், குபீர் சிரிப்பை வரவழைக்கும் நகைச்சுவை வசனங்கள், விறுவிறுப்பான திரைக்கதை இவை அனைத்தும்தான் இப்படங்களின் பொதுவான அம்சங்கள் ஆகும். அதை சற்றும் குறையாமல் நான்காம் பாகத்திலும் தக்க வைத்துள்ளது 'குங்பூ பாண்டா 4' படக்குழு.
இரண்டாவது வாரத்தில் படத்தின் மொத்த வசூல் ரூ.18.33 கோடியாக உயர்ந்தது. படம் வெளியான இரண்டு வாரத்தில், இது ஏற்கனவே உலகளவில் 202 மில்லியன் அமெரிக்க டாலர்களை வசூலித்துள்ளது. கடந்த வெள்ளியன்று ரூ 2.25 கோடியும், சனிக்கிழமையன்று ரூ 4 கோடியும் வசூலானது. ஞாயிற்றுக்கிழமை மீண்டும் ரூ 5.25 கோடி வசூல் செய்தது, ஆனால் திங்கள் அன்று பட வசூல் ரூ 1 கோடியாக சரிந்தது.
பொதுவாக ஹாலிவுட்டில், இரண்டாவது வாரத்தில் பட வசூல் குறையத் தொடங்கும். ஆனால் இப்படம் இரண்டாவது வாரத்திலும் நல்ல வசூலானது. உலகளவில் ரூ. 1,600 கோடிக்கு மேல் வசூலாகியுள்ளது குங்பூ பாண்டா 4 திரைப்படம்.
பிரபல கிரிக்கெட் வீரர் ஹர்திக் பாண்டியா, குங்பூ பாண்டாவின் முக்கிய கதாபாத்திரமான போவுடன் வீடியோவை வெளியிட்டார்.
ஹர்திக் பாண்டியா டிராகன் வாரியரைச் சந்தித்தார். இரண்டு ஜாம்பவான்களும் தாங்கள் சிறப்பாகச் செய்வதைக் கொண்டாடும் ஒரு சூப்பர் வீடியோ எடுத்தார். இன்ஸ்டாகிராமில் வெளியிடப்பட்ட வீடியோவில், பாண்டியாவும் போவும் நடனமாடுவதை காணலாம்.
ஹர்திக் பாண்டியா, "நான் எப்போதுமே குங்பூ பாண்டாவின் தீவிர ரசிகன். போவின் உறுதியான இயல்பு, ஆற்றல், கடின உழைப்பு என என்னுடன் ஒத்துப்போகும் . டீம் பிளேயராக இருப்பதால், இந்த பார்ட்னர்ஷிப் என்னை 'குங்பூ பாண்டியா' என்று அன்புடன் அழைக்கிறது. எனது ரசிகர்கள் கிரிக்கெட் மைதானத்தில் சில குங்பூ மேஜிக்கை எதிர்பார்க்கலாம்" என்றார்.
View this post on Instagram
View this post on Instagram