மற்றவர்கள் சத்தம் போட்டால் போடட்டும் நாம் நமது வேலையை அமைதியாக பார்ப்போம் - ரஜினிகாந்த் பேச்சு

மற்றவர்கள் சத்தம் போட்டால் போடட்டும் நாம் நமது வேலையை அமைதியாக பார்ப்போம் மன்ற நிர்வாகிகளிடையே ரஜினிகாந்த் பேசினார். #Rajinikanth #RajiniMakkalMandram
மற்றவர்கள் சத்தம் போட்டால் போடட்டும் நாம் நமது வேலையை அமைதியாக பார்ப்போம் - ரஜினிகாந்த் பேச்சு
Published on

சென்னை

ராகவேந்திரா திருமண மண்டபத்தில் இன்று நெல்லை மாவட்ட ரசிகர்களை சந்தித்தார். முந்தைய கூட்டங்களில் ரஜினியின் காணொளி காட்சி ஒளிபரப்பப்பட்ட நிலையில் முதல் முறையாக ரஜினிகாந்த் நேரில் கலந்துரையாடினார்.

ரஜினிகாந்த் அவர்களிடையே பேசும் போது கூறியதாவது:-

காலா திரைப்படம் நெல்லை மாவட்ட கதை தான். நீங்கள் மற்றவர்களுக்கு அரசியலை கற்றுக்கொடுப்பவர்கள்.

ஒரு குடும்பம் நடத்தணும்னா குடும்பத்தலைவன் சரியாக இருக்கணும்; இந்த குடும்பத்தை பொறுத்தவரை நான் சரியாக இருக்கிறேன். மற்றவர்கள் சத்தம் போட்டால் போடட்டும்; நாம் நமது வேலையை அமைதியாக பார்ப்போம். ரசிகர்கள் எல்லோரையும் ஒரே நேரத்தில் சந்திக்க சில நாட்கள் ஆகும் .

அரசியலில் கட்டமைப்புதான் முக்கியம். அடித்தளத்தை வலிமையுடன் அமைக்க வேண்டும் எனபதால்தான் நாம் இவ்வாறு செயல்படுகிறோம். இது சாதாரண பில்டிங் கிடையாது. 32 ஃப்ளோர். 32 மாவட்டம், அதனால் ஃபவுண்டேஷனை ஸ்ட்ராங்காக போடனும். அரசியலில் எந்த விஷயத்தையும் கவனமாக கையாள வேண்டும் என கூறினார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com