‘‘மம்முட்டி–மோகன்லால் இருவரையும் பிடிக்கும்’’ – காஜல் அகர்வால்

காஜல் அகர்வால் நடித்து கடந்த வருடம் தமிழிலும், தெலுங்கிலும் தலா 4 படங்கள் திரைக்கு வந்தன.
‘‘மம்முட்டி–மோகன்லால் இருவரையும் பிடிக்கும்’’ – காஜல் அகர்வால்
Published on

காஜல் அகர்வால் கைவசம் பாரிஸ் பாரிஸ் என்ற தமிழ் படம் உள்ளது. புதிதாக 2 தெலுங்கு படங்களிலும் ஒப்பந்தமாகி உள்ளார். கேரளா சென்ற காஜல் அகர்வால் அங்கு நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:

எனக்கு மோகன்லாலை மிகவும் பிடிக்கும். மம்முட்டியை உடற்பயிற்சி கூடம் ஒன்றில் சந்தித்தேன். அவரும் எனக்கு பிடித்தமானவர்தான். இவர்கள் தவிர துல்கர்சல்மான், நிவின்பாலி ஆகியோரும் பிடித்தமான நடிகர்கள் பட்டியலில் உள்ளனர். மலையாள சினிமாவில் திறமையான நடிகர்கள் உள்ளனர்.

தமிழில் நடிக்கும் எனது புதிய படமான பாரிஸ் பாரிஸ் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடக்கிறது. தமிழ், தெலுங்கு திரையுலகம் இரண்டுமே எனக்கு சவுகரியமாக உள்ளன. தமிழில் நிறைய பேருடன் நடித்து விட்டேன். எனது நடிப்பு திறமையை வெளிப்படுத்தும் கதை, கதாபாத்திரங்களுக்கே முக்கியத்துவம் கொடுக்கிறேன். அதுபோன்ற கதைகள் அமையவும் செய்கின்றன.

மலையாள படங்களில் இதுவரை நடிக்கவில்லை. மலையாள திரையுலகிலும் எனது பங்களிப்பு இருக்க வேண்டும் என்று ஆசைப்படுகிறேன். நல்ல கதைகள் அமைந்தால் மலையாளத்தில் நடிப்பேன். எனக்கு பாடவும் நடனம் ஆடவும் வராது. எப்படியோ படங்களில் நடனம் ஆடிவிடுகிறேன். சினிமா துறையில் நான் முன்மாதிரியாக பின்பற்றுகிறவர்கள் பலர் உள்ளனர். அவர்களில் முதன்மையாக இருப்பவர்கள் ஸ்ரீதேவி, மாதுரி தீட்சித், பிரியங்கா சோப்ரா.

இவ்வாறு காஜல் அகர்வால் கூறினார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com