

எஸ்.பி.பாலசுப்பிரமணியம் இறுதி சடங்கில் நடிகர் அர்ஜூன் கலந்துகொண்டார். அப்போது அவர் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் உருக்கமாக கூறியதாவது:-
என்னுடைய படங்களில் பல அற்புதமான பாடல்களை எஸ்.பி.பாலசுப்பிரமணியம் பாடியிருக்கிறார். நான் நடித்த ஜெய்ஹிந்த் படத்தில் தாயின் மணிக்கொடி... தாயின் மணிக்கொடி... சொல்லுது ஜெய்ஹிந்த்..., என உணர்ச்சிப்பூர்வமான பாடலை உலகுக்கு அளித்தவர். மலரே மவுனமா... பாடல் மூலம் லட்சக்கணக்கான ரசிகர்களை ஒரே நேரத்தில் ஈர்த்தவர். கலைச்சேவையில் மகத்தான சாதனை படைத்த அவருக்கு நிச்சயம் பாரத ரத்னா விருது வழங்க வேண்டும். இது நான் மட்டுமல்ல, திரையுலகை சேர்ந்தவர்கள் அனைவரது வேண்டுகோளும் கூட...
இவ்வாறு அவர் கூறினார்.