

'நிறைய பேர் திருமணம் செய்துகொள்ளுங்கள், குழந்தை பெற்றுக்கொள்ளுங்கள் என்று எனக்கு அறிவுரை சொல்கிறார்கள். என் வாழ்க்கையை முடிவு செய்யும் அதிகாரத்தை அவர்களுக்கு யார் கொடுத்தது?
இப்போதெல்லாம் 10 திருமணங்கள் நடைபெற்றால் அதில் ஐந்து ஜோடிகள் கூட திருமணத்திற்கு பிறகு சந்தோஷமாக இருக்கவில்லை. யாரோ என்னை சந்தோஷமாக வைத்துக்கொள்ள வேண்டும் என்று ஏன் நான் நினைக்க வேண்டும்? நமக்காக மற்றவர்கள் எதற்காக உழைக்க வேண்டும்? என் வாழ்க்கையை நான் ஆனந்தமாக கழிக்க வேண்டும் என நினைக்கிறேன்.
நான் பார்ட்டி, பப் என செல்வது இல்லை. திருமணம் செய்து கொண்டால் அதன் பிறகு சந்தோஷமாக இருக்க முடியாது. திருமணம் என்ற பெயரில் மற்றவரை சார்ந்து வாழ்ந்தால் நமது நெருக்கடியையும் அவரே தாங்க வேண்டும். ஒரு வேளை நான் திருமணம் செய்து கொள்வதாக இருந்தால் மணமகன் எனது சம்பாத்தியத்தை சார்ந்து இருக்கக்கூடாது" என்றார்.