’எனக்கு ஜோடியாக நடிக்க யாரும் முன்வரவில்லை’ - 'ரஜினி கேங்' பட ஹீரோ

‘ரஜினி கேங்’ படம் விரைவில் திரைக்கு வர உள்ளது.
'No one has come forward to act as my partner' - 'Rajini Gang' hero
Published on

சென்னை,

பிஸ்தா திரைப்படம், உப்பு புளி காரம், கனா காணும் காலங்கள் போன்ற வெப் தொடர்களை இயக்கிய எம்.ரமேஷ் பாரதி இயக்கியுள்ள படம், ரஜினி கேங்.

ரஜினி கிஷன் தயாரித்து, கதாநாயகனாக நடித்துள்ள இப்படத்தில் அவருக்கு ஜோடியாக திவிகா நடித்துள்ளார். மேலும், முனீஷ்காந்த், மொட்டை ராஜேந்திரன், கல்கி உள்ளிட்டோர் நடித்துள்ளனர்.

இதற்கிடையில், ரஜினி கேங் படத்தின் இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா சமீபத்தில் நடைபெற்றது. இதில் கலந்துகொண்டு பேசிய ரஜினி கிஷன் தனக்கு ஜோடியாக நடிக்க யாரும் முன்வரவில்லை என்று கூறினார். அவர் பேசுகையில்,

'இப்படத்தில் கதாநாயகியாக நடிக்க யாரும் முன்வரவில்லை. பல கதாநாயகிகள் எனக்கு ஜோடியாக நடிக்க மறுத்துவிட்டனர். கடைசியாக நடிகை திவிகா முன்வந்தார். எனக்கு ஜோடியாக நடிக்க ஒப்புக்கொண்டதற்கு அவருக்கு நன்றி, என்றார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com