மக்கள் தான் என் கடவுள் - நெகிழ்ச்சி வீடியோ வெளியிட்ட வடிவேலு

கோப்புப்படம்
மக்கள் தான் எனக்கு எல்லாமே என்று நகைச்சுவை நடிகர் வடிவேலு கூறியுள்ளார்.
வைகைப்புயல் என்று ரசிகர்களால் அழைக்கப்படும் நகைச்சுவை நடிகர் வடிவேலு இன்று தனது 65-வது பிறந்தநாளைக் கொண்டாடினார். அவருக்கு திரையுலகினரும், ரசிகர்களும் வாழ்த்து தெரிவித்தனர். இதற்கிடையில் வாழ்த்து தெரிவித்த ரசிகர்களுக்கு வடிவேலு நன்றி தெரிவித்து வீடியோ பதிவு வெளியிட்டுள்ளார்.
அதில், "என் பிறந்தநாளில் உலகம் முழுவதும் என்னை வாழ்த்திய அனைவருக்கும் என் நன்றி. உங்களது வாழ்த்து, என் பெற்றோர், குலதெய்வத்தின் அருள், ஆசியை விட பெரிதானது. மக்கள் தான் என் கடவுள். என் தெய்வம். மக்கள் தான் எனக்கு எல்லாமே. நீங்கள் இல்லாவிட்டால், இந்த வடிவேலு கிடையாது.
இன்றைக்கு இந்தளவு நிமிர்ந்து நிற்கிறேன் என்றால், சினிமாவில் இன்றளவும் ஜொலிக்கிறேன் என்றால் அதற்கு காரணம் உங்கள் ஆசீர்வாதம் தான். உங்களது வாழ்த்து என்றைக்குமே எனக்கு தேவை" என்று குறிப்பிட்டுள்ளார்.






