ஒல்லி தேகத்துக்கு மாற பிரணிதா யோசனை

ஒல்லி தேகத்துக்கு மாற நடிகை பிரணிதா யோசனை தெரிவித்துள்ளார்.
ஒல்லி தேகத்துக்கு மாற பிரணிதா யோசனை
Published on

தமிழில் உதயன், சகுனி, மாஸ் உள்ளிட்ட படங்களில் நடித்துள்ள பிரணிதா தெலுங்கு, கன்னட படங்களிலும் நடித்துள்ளார். அவர் அளித்துள்ள பேட்டி வருமாறு:-

எனது அப்பா, அம்மா இருவரும் டாக்டர்கள். என்னையும் டாக்டராக்க விரும்பினர். ஆனால் எனக்கு நடிகையாக ஆர்வம். சினிமா வாய்ப்பு வந்ததும் எதிர்த்தனர். ஆனால் தொடர்ந்து படங்கள் வந்ததால் எனது போக்கில் விட்டு விட்டனர். டாக்டராகாமல் நடிகையானதற்காக பெருமைப்படுகிறேன். பலவிதமான கதாபாத்திரங்களில் வாழ்கிற வாய்ப்பு நடிகைகளுக்குத்தான் கிடைக்கும். ஒரு சரித்திர கதையம்சம் உள்ள படத்தில் நடிக்க ஆசை இருக்கிறது. சரித்திர காலத்து ஆடை அணிகலன்கள் அணிந்து நடிக்க விருப்பம் உள்ளது. என்னை மாதிரி ஒல்லியாக இருக்க என்ன சாப்பிட வேண்டும் என்று கேட்கின்றனர். எண்ணெய் சேர்க்காத உணவு வகைகளை சாப்பிட்டாலே யாரும் எடையே கூட மாட்டார்கள். நான் ஓட்டலுக்கு போனால்கூட எனக்கு பிடித்த உணவுகளை ஆர்டர் செய்து அவற்றில் எண்ணெய் சேர்க்காமல் செய்து கொண்டு வாருங்கள் என்பேன். ஆர்டர் எடுப்பவர்கள் எப்படியம்மா எண்ணெயே இல்லாமல் சமைத்து கொண்டு வருவது என்று கேள்வி கேட்ட சந்தர்ப்பங்களும் உண்டு. சினிமா நடிகைகளை பார்த்து இதுதான் இன்றைய பேஷன் என்று அதை பின் தொடர்வோர் நிறைய இருப்பதால் ஆடை விஷயத்தில் கவனமாக இருப்பேன்.

இவ்வாறு பிரணிதா கூறினார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com