பஞ்சாப் வெள்ளம் - உதவிக்கரம் நீட்டிய ஷாருக்கான்

1,500 குடும்பங்களுக்கு நிவாரண உதவிகளை வழங்கியுள்ளார்.
சண்டிகர்,
பாலிவுட் நடிகர் ஷாருக்கான், பஞ்சாபில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு உதவிக்கரம் நீட்டியுள்ளார். கிட்டத்தட்ட 1,500 குடும்பங்களுக்கு நிவாரண உதவிகளை வழங்கியுள்ளார்.
ஒவ்வொரு குடும்பத்திற்கும் மருந்துகள், உணவு பொருட்கள், கொசு வலைகள், படுக்கைகள் மற்றும் மெத்தைகள் உள்ளிட்டவைகள் அடங்கிய தொகுப்பை வழங்கி உள்ளதாக தெரிகிறது. ஷாருக்கின் இந்த உதவி பரவலாக பாராட்டப்பட்டுள்ளது.
வட இந்தியாவில் கடந்த பல வாரங்களாக கனமழை கொட்டி தீர்த்து வருகிறது. உத்தர பிரதேசம், உத்தரகாண்ட், இமாசல பிரதேசம், பஞ்சாப், டெல்லி உள்ளிட்ட மாநிலங்களில் கனமழை பெய்து வருகிறது. இடைவிடாது கொட்டி வரும் கனமழையால் உயிரிழப்புகளும், பொருட்சேதங்களும் ஏற்பட்டு வருகின்றன.
Related Tags :
Next Story






