படப்பிடிப்பு தளத்திற்கு திடீர் என்ட்ரி கொடுத்த ரஜினிகாந்த... நடிகை கங்கனா ரணாவத் பகிர்ந்த புகைப்படம் வைரல்...!

நடிகை கங்கனா ரணாவத் அடுத்ததாக ஏ.எல்.விஜய் இயக்கும் புதிய படத்தில் மாதவனுக்கு ஜோடியாக நடிக்கிறார்.
Image Credits : Twitter.com/@KanganaTeam
Image Credits : Twitter.com/@KanganaTeam
Published on

சென்னை,

அஜித் நடிப்பில் கடந்த 2007-ம் ஆண்டு வெளியான 'கிரீடம்' படத்தின் மூலம் தமிழ் சினிமாவுக்கு இயக்குனராக அறிமுகமாவனர் ஏ.எல்.விஜய். அதன்பின்னர் மதராசப்பட்டினம், தெய்வ திருமகள், தாண்டவம் உள்ளிட்ட பல படங்களை இயக்கி அனைவரையும் கவர்ந்தார். தற்போது இவர் அருண் விஜய் நடிக்கும் 'அச்சம் என்பது இல்லையே' படத்தை இயக்கி வருகிறார். அந்த படம் விரைவில் திரைக்கு வர இருக்கிறது.

அடுத்ததாக ஏ.எல்.விஜய் இயக்கும் புதிய படத்தில் நடிகை கங்கனா ரணாவத் நாயகியாக நடிக்க உள்ளார். தனு வெட்ஸ் மனு எனும் இந்தி படத்திற்கு பிறகு நடிகர் மாதவன் இந்த படத்தில் கங்கானாவுக்கு ஜோடியாக நடிக்க உள்ளார். இந்தி மற்றும் தமிழ் என இரண்டு மொழிகளில் தயாராகும் இந்த படத்திற்கு ஜி.வி.பிரகாஷ் இசையமைக்க உள்ளார்.

இந்நிலையில் இப்படத்தின் படப்பிடிப்பு இன்று சென்னையில் தொடங்கியது. அந்த படப்பிடிப்பு தளத்திற்கு நேரில் சென்று நடிகர் ரஜினிகாந்த் வாழ்த்து தெரிவித்துள்ளார். அந்த புகைப்படங்களை தனது சமூக வலைதள பக்கத்தில் பகிர்ந்து நடிகை கங்கனா, 'எங்களின் முதல் நாள் படப்பிடிப்பில் இந்திய சினிமாவின் கடவுள் தலைவர் ரஜினிகாந்த் எங்கள் செட்டிற்கு திடீர் வருகை தந்து அதிர்ச்சியளித்தார். என்ன ஒரு அழகான நாள்' என்று பதிவிட்டுள்ளார். அந்த புகைப்படங்கள் தற்போது வைரலாகி வருகிறது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com