“ரஜினிகாந்த் அரசியலில் சாதிப்பார்” -நடிகை சுமலதா

தமிழில் 1980-களில் முன்னணி கதாநாயகியாக இருந்தவர் சுமலதா. திசைமாறிய பறவைகள், முரட்டுக்காளை, கழுகு, தீர்ப்பு உள்பட பல படங்களில் நடித்துள்ளார்.
“ரஜினிகாந்த் அரசியலில் சாதிப்பார்” -நடிகை சுமலதா
Published on

தற்போது கர்நாடக மாநிலம் மண்டியா தொகுதியில் சுயேச்சையாக போட்டியிட்டு வெற்றி பெற்றுள்ளார். சுமலதா அளித்த பேட்டி வருமாறு:-

நான் அனைத்து தென்னிந்திய மொழி படங்களிலும் நடித்துள்ளேன். நடிகர் அம்பரிஷை திருமணம் செய்த பிறகு நடிப்புக்கு முழுக்கு போட்டு சினிமாவை விட்டு விலகினேன். அம்பரிஷ் நடிகர் மட்டுமின்றி மனிதாபிமானம் உள்ள தலைவர். எம்.பி.யாகவும், மந்திரியாகவும் இருந்து நிறைய உதவிகள் செய்தார்.

அவர் இறந்த பிறகு மண்டியா தொகுதி மக்கள் இனிமேல் எங்களை யார் பாதுகாப்பார்கள் என்று வேதனைப்பட்டனர். எனவே அவர்களுக்காகவே சுயேச்சையாக போட்டியிட்டு வெற்றி பெற்று இருக்கிறேன். சினிமா நடிகர்கள் பலர் இப்போது அரசியலுக்கு வருகிறார்கள்.

தமிழ்நாட்டில் ரஜினிகாந்தை எனக்கு நன்றாக தெரியும். அவருக்கு அரசியல் பற்றி தெளிவான கருத்து உள்ளது. தெளிவாக புரிந்தும் வைத்துள்ளார். இந்தியா முழுவதும் அரசியல் ஒரு மாதிரி இருக்கும். ஆனால் தமிழ்நாட்டு அரசியல் சூழல் மட்டும் வேறுமாதிரி இருக்கும். எனவே ரஜினிகாந்த் முழுமையாக அரசியலில் ஈடுபட்டால் நன்றாக வருவார். சாதிக்கவும் செய்வார். நல்லதையும் செய்வார். கமல்ஹாசனும் அரசியலில் சாதிப்பார். இவ்வாறு சுமலதா கூறினார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com