ரஜினியின் 'கூலி' படம் ரூ.1000 கோடி வசூல் பண்ணும்.. வாழ்த்திய இயக்குநர் ரத்னகுமார்

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் ரஜினி நடிக்கும் 'கூலி' படத்தின் டைட்டில் அறிவிப்பு நேற்று மாலை வெளியானது. இதைப் பார்த்த இயக்குநர் ரத்னகுமார், 'படம் நிச்சயம் 1000 கோடி ரூபாய் வசூலிக்கும்' என கூறியுள்ளார்.
ரஜினியின் 'கூலி' படம் ரூ.1000 கோடி வசூல் பண்ணும்.. வாழ்த்திய இயக்குநர் ரத்னகுமார்
Published on

'வேட்டையன்' படத்தை முடித்த கையோடு அடுத்து ரஜினி தன்னுடைய 171-வது படத்தைத் தொடங்குகிறார். லோகேஷ் கனகராஜ் இயக்கும் இந்தப் படத்திற்கு 'கூலி' எனத் தலைப்பிடப்பட்டுள்ளது. படத்திற்கான டைட்டில் அறிவிப்பு நேற்று மாலை வெளியானது. பிளாக் அண்ட் வொயிட் மோடில், தங்க நிற ஹைலைட்டோடு ரெட்ரோ லுக்கில் இருந்த ரஜினிக்கு ரசிகர்கள்பயர் விட்டு கொண்டாடினர். 'மாஸ்டர்', 'லியோ' உள்ளிட்ட லோகேஷின் முந்தைய படங்களில் திரைக்கதையில் அவருடன் இணைந்து பணியாற்றியவர் 'மேயாத மான்' இயக்குநர் ரத்னகுமார். 

சூப்பர் ஸ்டார் படத்திற்கு ஏற்ற டைட்டில் 'கூலி'. கருப்பு மற்றும் தங்க நிறத்தை ரஜினிகாந்த்துக்காக பயன்படுத்திய விதம் அனிருத் மியூசிக், டிஸ்கோ பாடல் என ஆரம்பமே அதிர்கிறது.மேஜிக்கல் 4 டிஜிட் நம்பர் வசூலை (ஆயிரம் கோடி ரூபாய்) படம் தொட வேண்டும்; நிச்சயம் அது நடக்கும். 'முயற்சி மெய் வருத்தக் 'கூலி' தரும்' என்கிற பழமொழியையும் ஷேர் செய்துள்ளார். மேலும், தனக்கு பதிலாக இந்த படத்தில் வசனகர்த்தாவாக மாறியுள்ள இயக்குநர் சந்த்ரு அன்பழகனையும் டேக் செய்து ரொம்ப சந்தோஷம் என எக்ஸ் பக்கத்தில் இயக்குநர் ரத்னகுமார் பதிவிட்டுள்ளார்.

இந்நிலையில், இயக்குநர் ரத்னகுமாரின் பதிவுக்கு ரஜினி ரசிகர்கள் திட்டி வருகின்றனர். இதற்கு முன்பு, 'லியோ' படத்தின் வெற்றிவிழாவின் போது ரஜினி- விஜய் ரசிகர்கள் மத்தியில் 'காக்கா- கழுகு' சண்டை உக்கிரமாக நடந்து கொண்டிருந்த சமயம் அது. அந்த நிகழ்வில் கலந்து கொண்ட ரத்னகுமார், "ஒரே சூப்பர்ஸ்டார் விஜய்தான். என்னதான் உயரப் பறந்தாலும் கழுகு பசிக்கு கீழே வந்துதான் ஆக வேண்டும்" என ரஜினிகாந்தை தாக்கிப் பேசினார். இது அந்த சமயத்தில் ரஜினி ரசிகர்கள் மத்தியில் கொந்தளிப்பை ஏற்படுத்தியது. இதனால், 'கூலி' படத்தில் லோகேஷூடன் இணைந்து ரத்னகுமார் பணியாற்றக் கூடாது என்றும் சொல்லி வந்தனர். அதுபோலவே, இவர் இந்தப் படத்தில் பணியாற்றவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com