ரஜினிகாந்த் மகள் சவுந்தர்யாவுக்கு ஆண் குழந்தை

ரஜினிகாந்த் மகள் சவுந்தர்யாவுக்கு ஆண் குழந்தை பிறந்துள்ளது.
ரஜினிகாந்த் மகள் சவுந்தர்யாவுக்கு ஆண் குழந்தை
Published on

நடிகர் ரஜினிகாந்தின் இளைய மகள் சவுந்தர்யா. இவர் கடந்த 2014-ல் ரஜினி நடிப்பில் வெளியான கோச்சடையான் அனிமேஷன் படத்தை டைரக்டு செய்து இருந்தார். தொடர்ந்து தனுஷ் நடித்த வேலை இல்லா பட்டதாரி 2-ம் பாகம் படத்தையும் இயக்கினார். சவுந்தர்யாவுக்கும், தொழிலதிபரும், `வஞ்சகர் உலகம்' என்ற படத்தில் நடித்தவருமான விசாகனுக்கும் கடந்த 2019-ல் திருமணம் நடந்தது. இந்த நிலையில் சவுந்தர்யா கர்ப்பமானார். சில மாதங்களுக்கு முன்பு கர்ப்பமாக இருக்கும் புகைப்படங்களை வலைத்தளத்தில் பகிர்ந்தார். தற்போது சவுந்தர்யாவுக்கு ஆண் குழந்தை பிறந்துள்ளது. குழந்தைக்கு வீர் என்று பெயர் சூட்டி இருப்பதாக தெரிவித்து உள்ளார். சவுந்தர்யாவுக்கு ஏற்கனவே வேத் என்ற ஆண் குழந்தை உள்ளது. ''கடவுளின் அருள், எங்கள் பெற்றோரின் ஆசியால் வேத்தின் சகோதரனை வரவேற்பதில் மகிழ்கிறோம்'' என்று டுவிட்டரில் பதிவு வெளியிட்டுள்ளார். சவுந்தர்யா-விசாகன் தம்பதிக்கு திரையுலகினரும், ரசிகர்களும் வலைத்தளத்தில் வாழ்த்து தெரிவித்து உள்ளனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com