முதல் 3 நாட்கள் ரிவ்யூ எடுக்க அனுமதிக்க கூடாது - நடிகர் விஷால்


முதல் 3 நாட்கள் ரிவ்யூ எடுக்க அனுமதிக்க கூடாது - நடிகர் விஷால்
x

சினிமாவை காப்பாற்ற இந்த முடிவு எடுக்கப்பட வேண்டும் என விஷால் கூறியுள்ளார்.

சென்னை,

விக்னேஷ் நடித்துள்ள ரெட் பிளவர் பட பாடல் வெளியீட்டு விழா சென்னையில் நேற்று நடைபெற்றது. இதில் சிறப்பு விருந்தினராக நடிகரும் நடிகர் சங்க பொதுச்செயலாளருமான விஷால் கலந்து கொண்டார். நிகழ்ச்சியில் விஷால் பேசியதாவது:

படங்களுக்கு விமர்சனம் என்பது வேண்டும். இனி வருங்காலங்களில் ஒரு படம் வெளியாகும்போது முதல் 12 காட்சிகள், அதாவது முதல் 3 நாட்கள் தியேட்டர் வளாகத்திற்குள் பப்ளிக் ரிவியூ என்ற பெயரில் பேட்டி எடுக்க யாரையும் அனுமதிக்க வேண்டாம் என்று தியேட்டர் அதிபர்கள், விநியோகஸ்தர்கள், தயாரிப்பாளர்களுக்கு வேண்டுகோள் வைக்கிறேன்.

தேவைப்பட்டால் தியேட்டருக்கு வெளியே எடுத்துக் கொள்ளட்டும் அல்லது சம்பந்தப்பட்டவர்கள் படம் பார்த்து அவர்களே சொந்தமாக விமர்சனம் கொடுக்கட்டும். சினிமாவை காப்பாற்ற இந்த முடிவு எடுக்கப்பட வேண்டும்'' என்றார். கடந்த சில தினங்களுக்கு முன்பாக ஆர்கே செல்வமணியும் இதே போன்ற ஒரு கோரிக்கையை முன்வைத்து இருந்தது குறிப்பிடத்தக்கது.

1 More update

Next Story