

டார்ச்லைட் படத்தில் விபசார அழகியாக துணிந்து நடித்து இருக்கிறீர்களே எப்படி? என்று கேள்வி எழுப்பினர்.
அதற்கு டார்ச்லைட் படம் விபசார அழகிகளை பற்றிய கதைதான். ஒரு கிராமத்தில் இருந்து ஏழை பெண் ஒருத்தி திருமணம் செய்துகொண்டு கணவனுடன் நகரத்துக்கு வருகிறாள். அவள் எப்படி விபசார அழகியாக மாறுகிறாள்? என்பதுதான் கதை.
இந்த கதையை டைரக்டர் மஜீத் சில முன்னணி நடிகைகளிடம் கூறியபோது, அவர்கள் நடிக்க மறுத்து விட்டார்கள். அதன்பிறகு மஜீத் என்னை தேடிவந்தார். 3 முறை என்னிடம் கதையை சொன்னார். முதல்முறை கேட்டபோது நான் அழுது விட்டேன். 2வது முறையாக, 3வது முறையாக கதையை கேட்டபோது, ஒவ்வொரு காட்சியிலும் எப்படி நடிப்பது? என்பதை முடிவு செய்தேன். 3 முறை கதை கேட்டபோதும் நான் கண்ணீர்விட்டு அழுதேன். அதன்பிறகு நடிப்பதற்கு சம்மதம் தெரிவித்தேன். யார் என்ன சொன்னாலும் பரவாயில்லை. படத்தில் நடிப்பது என்று முடிவு செய்தேன் என்றார்.
நெடுஞ்சாலைகளில் நின்றுகொண்டு டார்ச்லைட் மூலம் விபசாரம் தொழில் செய்வதுபோல், என் வேடம் அமைந்துள்ளது.
மும்பை, கொல்கத்தாவை போல், சென்னையிலும் விபசார விடுதி கொண்டு வருவதில் எனக்கு உடன்பாடு கிடையாது. யாரையும் யாரும் மாற்ற முடியாது என்றும் தெரிவித்தார்.