ரசிகர்களிடம் மன்னிப்பு கேட்ட சமந்தா

வலைத்தளத்தில் “விஜய் தேவரகொண்டா” ரசிகர்களிடம் நான் மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன் என நடிகை சமந்தா தெரிவித்துக்கொள்கிறேன்.
ரசிகர்களிடம் மன்னிப்பு கேட்ட சமந்தா
Published on

நடிகை சமந்தா மயோசிடிஸ் என்றா தசை அழற்சி நோய் பாதிப்பில் சிக்கி சிகிச்சை எடுத்து வந்ததால் அவர் நடிக்க இருந்த பல படங்கள் முடங்கின. விஜய் தேவரகொண்டாவுடன் நடித்த குஷி படமும் நின்று போனது. தற்போது உடல்நிலை தேறி மீண்டும் நடிக்க தொடங்கி இருக்கிறார். இந்தி வெப் தொடர் படப்பிடிப்பில் இணைந்துள்ளார், ஆனால் குஷி படத்தில் நடிக்க தேதி ஒதுக்காமல் இருக்கிறார் என்று விமர்சனங்கள் கிளம்பின. வெப் தொடரில் நடிப்பவர் குஷி படத்தில் நடிக்க ஏன் மறுக்கிறார் என்று விஜய்தேவரகொண்டா ரசிகர்களும் கண்டித்தனர். இந்த நிலையில் வலைத்தளத்தில் குஷி படத்தின் நிலைமை எந்த நிலையில் உள்ளது என்று சமந்தாவிடம் ஒரு ரசிகர் கேள்வி எழுப்பினார். இதற்கு பதில் அளித்து சமந்தா கூறும்போது, "விஜய் தேவரகொண்டா ரசிகர்களிடம் நான் மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன். குஷி படப்பிடிப்பை விரைவில் மீண்டும் தொடங்க இருக்கிறோம் என்றார். இதையடுத்து நல்ல செய்தி சொன்னீர்கள்'' என்று ரசிகர்கள் மகிழ்ச்சி தெரிவித்து பதிவிட்டுள்ளனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com