காதலர் தினத்தில் சமந்தா படம்

வி ஜய்சேதுபதி, திரிஷா நடித்த ‘96’ படம் தெலுங்கில் ரீமேக் ஆகி உள்ளது. இதில் திரிஷா வேடத்தில் சமந்தா நடித்துள்ளார்.
காதலர் தினத்தில் சமந்தா படம்
Published on

இந்த படம் காதலர் தினத்தில் வெளியாக வேண்டும் என்று சமந்தா விரும்பினார். அவர் நினைத்தபடியே அடுத்த வருடம் காதலர் தினமான பிப்ரவரி 14-ந்தேதி திரைக்கு வருகிறது. சமந்தா கூறியதாவது:-

நான் எந்த கதாபாத்திரமாக இருந்தாலும் நடிக்க ஒப்புக்கொள்கிறேன். நடிகையாக வளர்ந்து கொண்டு இருக்கிறேன். திருமணம் ஆனபிறகு குடும்ப பின்னணி, நான் மருமகளாக சென்றுள்ள வீடு இதையெல்லாம் மனதில் வைத்துத்தானே கதைகளை தேர்வு செய்கிறீர்கள்? என்று என்னை பார்த்து கேட்கிறார்கள்.

அப்படி இல்லை. எனக்கு அனுபவம் வந்துள்ளது. நீண்ட நாட்களாக சினிமாவில் இருக்கிறேன். கதைகள் தேர்வில் மாற்றம் இல்லாமல் இருந்தால் இத்தனை காலமாக நான் பெற்ற சினிமா அனுபவத்துக்கு என்ன பயன் இருக்கிறது. எனவே அனுபவத்துக்கு ஏற்ற மாதிரி கதைகளை தேர்வு செய்கிறேன்.

வர்த்தக ரீதியான படங்களில் மட்டும் நடிக்க மாட்டேன். படத்தில் சமந்தா இருக்கிறார் என்றால் அது வித்தியாசமான படமாக இருக்கும் என்று ரசிகர்கள் எதிர்பார்க்க ஆரம்பித்து விட்டனர். நானும் வித்தியாசமாக நடிக்கவே விரும்புகிறேன். இவ்வாறு சமந்தா கூறினார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com