சமந்தா நடித்துள்ள 'சாகுந்தலம்' படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு

சாகுந்தலம் படத்தின் புதிய ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.
சமந்தா நடித்துள்ள 'சாகுந்தலம்' படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு
Published on

சென்னை,

சரித்திர கதையம்சம் கொண்ட படமாக உருவாகியுள்ள 'சாகுந்தலம்' படத்தில் நடிகை சமந்தா நடித்துள்ளார். மலையாள நடிகர் தேவ் மோகன் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்துள்ள இந்த படத்தை குணசேகர் இயக்கியுள்ளார். ஸ்ரீ வெங்கடேஷ்வரா கிரியேஷன்ஸ் தயாரித்துள்ள இந்த படத்திற்கு மணிசர்மா இசையமைத்துள்ளார்.

இந்த திரைப்படம் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி உள்ளிட்ட 5 மொழிகளில் வெளியாகவுள்ளது. சமீபத்தில் 'சாகுந்தலம்' திரைப்படத்தின் டிரைலர் மற்றும் பாடல்கள் வெளியாகி கவனம் பெற்றது.

இந்த திரைப்படம் பிப்ரவரி 17-ந்தேதி திரையரங்குகளில் வெளியாகும் என முதலில் அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால் சில காரணங்களுக்காக ரிலீஸ் தேதி தள்ளிவைக்கப்படுவதாகவும், புதிய ரிலீஸ் தேதி விரைவில் அறிவிக்கப்படும் எனவும் படத்தின் தயாரிப்பு நிறுவனம் தெரிவித்தது.

இந்த நிலையில் தற்போது சாகுந்தலம் படத்தின் புதிய ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி இந்த படம் வரும் ஏப்ரல் 14-ந்தேதி திரையரங்குகளில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

Sri Venkateswara Creations (@SVC_official) February 10, 2023 ">Also Read:

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com