பிரியா வாரியர் கண்சிமிட்டலில் பிரபலமான படம் ‘ஒரு அடார் லவ்’ நடிகைக்கு பாலியல் தொல்லை?

ஒரு அடார் லவ் படத்தில் பிரியாவாரியருடன் இன்னொரு கதாநாயகியாக நடித்த மிசெல் அன் பாலியல் தொல்லையில் சிக்கியதாக பரபரப்பு தகவல் வெளியானது.
பிரியா வாரியர் கண்சிமிட்டலில் பிரபலமான படம் ‘ஒரு அடார் லவ்’ நடிகைக்கு பாலியல் தொல்லை?
Published on

மலையாளத்தில் தயாராகி உள்ள ஒரு அடார் லவ் படம் பிரியா வாரியரின் கண் அசைவாலும் புருவ அசைவாலும் பெரிய அளவில் பிரபலமானது. படத்தில் இடம்பெற்ற மாணிக்ய மலராய பூவி பாடலில் இந்த கண் சிமிட்டல் காட்சி இருந்தது. இளைஞர்கள் மட்டுமன்றி இந்தி நடிகர்கள், விளையாட்டு வீரர்கள் என்று அனைத்து தரப்பினரையும் பிரியா வாரியர் கவர்ந்தார்.

குஜராத்தில் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வுக்கும் இதை பயன்படுத்தி இருந்தனர். இந்த படம் செப்டம்பர் மாதம் திரைக்கு வருகிறது. ஒரு அடார் லவ் படத்தில் பிரியாவாரியருடன் இன்னொரு கதாநாயகியாக நடித்தவர் மிசெல் அன். இவர் பாலியல் தொல்லையில் சிக்கியதாகவும் இதனால் மனம் உடைந்து தற்கொலைக்கு முயன்றதாகவும் பரபரப்பு தகவல் வெளியானது.

மிசெல் அன் எர்ணாகுளத்தில் உள்ள போலீசில் அளித்துள்ளது போன்ற புகார் மனுவும் சமூக வலைத்தளங்களில் வைரலானது. அந்த மனுவில், எனது அம்மாவும் உறவினர்களும் என்னை கடுமையாக தாக்கினார்கள். மனதளவில் சித்ரவதை செய்கின்றனர். பாலியல் தொல்லையிலும் சிக்கி இருக்கிறேன். என்னை கொன்று விடுவார்கள் என்ற அச்சம் உள்ளது. இவர்களின் சித்ரவதையால் தற்கொலைக்கும் முயன்றேன் என்று குறிப்பிடப்பட்டு உள்ளது.

இது மலையாள பட உலகில் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த நிலையில் மிசெல் அன் இதனை திடீரென்று மறுத்துள்ளார். எனக்கு குடும்பத்தினர் தொந்தரவு கொடுக்கவில்லை என்றும் பாலியல் தொல்லையும் ஏற்படவில்லை என்றும் அவர் கூறியுள்ளார். மிசெல் அன் தாயும் ஒரு அடார் லவ் படத்துக்கு எதிராக இந்த வதந்தி பரவி இருக்கிறது என்று கூறினார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com