‘சண்டக்காரி’ படப்பிடிப்பில் லண்டன் போலீசில் சிக்கிய ஸ்ரேயா!

விஜய் நடித்த ‘மதுர,’ விஜயகாந்த் நடித்த ‘அரசாங்கம்,’ திரிஷா நடித்த ‘மோகினி’ ஆகிய படங்களை டைரக்டு செய்தவர், ஆர்.மாதேஷ். அடுத்து இவர், ‘சண்டக்காரி’ என்ற படத்தை டைரக்டு செய்கிறார்.
‘சண்டக்காரி’ படப்பிடிப்பில் லண்டன் போலீசில் சிக்கிய ஸ்ரேயா!
Published on

சண்டக்காரி படத்தில் விமல்-ஸ்ரேயா காதல் ஜோடியாக நடிக்கிறார்கள். படத்தை பற்றி டைரக்டர் ஆர்.மாதேஷ் கூறியதாவது:-

இந்த படத்தில், ஸ்ரேயா ஒரு சாப்ட்வேர் கம்பெனியின் உயர் அதிகாரியாகவும், விமல் என்ஜினீயராகவும் நடித்து வருகிறார்கள். படப்பிடிப்பு லண்டனில் நடைபெற்றது. முக்கிய காட்சிகள் லண்டன் விமான நிலையத்தில் படமாக்கப்பட்டன. விமல், ஸ்ரேயா, சத்யன் ஆகிய மூன்று பேர்கள் சம்பந்தப்பட்ட காட்சிகள் படமானது.

அப்போது பாதுகாப்பு மிகுந்த குடியுரிமை பகுதியை ஸ்ரேயா தாண்டி போனார். உடனே அங்கிருந்த துப்பாக்கி ஏந்திய போலீசார் ஸ்ரேயாவை சூழ்ந்து கொண்டார்கள். எப்படி உரிய ஆவணங்கள் இல்லாமல் குடியுரிமை பகுதியை தாண்டி வந்தீர்கள்? என்று கேள்வி மேல் கேள்வி கேட்டார்கள்.

உடனே விமல் உள்பட படக்குழுவினர் ஓடிவந்து, உரிய ஆவணங்களை காட்டி, படப்பிடிப்புக்காக வந்து இருக்கிறோம் என்று விளக்கியபின், போலீசார் தங்கள் கட்டுப்பாட்டில் வைத்திருந்த ஸ்ரேயாவை விடுவித்தனர். இந்த படத்தை ஜெயபாலன், ஜெயக்குமார் தயாரித்து வருகிறார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com