சிம்புதேவன், பா.ரஞ்சித், வெங்கட் பிரபு, ராஜேஷ் எம். இயக்கும் 4 புதிய படங்கள்

4 வெவ்வேறு கதைகளை சிம்புதேவன், ராஜேஷ் எம், பா.ரஞ்சித், வெங்கட்பிரபு ஆகிய 4 டைரக்டர்கள் இயக்குகிறார்கள்.
சிம்புதேவன், பா.ரஞ்சித், வெங்கட் பிரபு, ராஜேஷ் எம். இயக்கும் 4 புதிய படங்கள்
Published on

ராட்சசன், ஓ மை கடவுளே ஆகிய படங்களை தயாரித்தவர், டில்லிபாபு. இவர் அடுத்து பிளாக் டிக்கெட் கம்பெனியுடன் இணைந்து, விக்டிம் என்ற ஆந்தலாஜி படத்தை தயாரிக்கிறார். இந்த படத்தின் 4 வெவ்வேறு கதைகளை சிம்புதேவன், ராஜேஷ் எம், பா.ரஞ்சித், வெங்கட்பிரபு ஆகிய 4 டைரக்டர்கள் இயக்குகிறார்கள். இதுபற்றி தயாரிப்பாளர் டில்லிபாபு கூறியதாவது:-

உலக அளவில் அனைத்து ரசிகர்களும் கொண்டாடும் படங்களை தருவதே என் முக்கிய நோக்கம். அந்த வகையில், சிம்புதேவன், ராஜேஷ் எம்., பா.ரஞ்சித், வெங்கட்பிரபு ஆகிய 4 டைரக்டர்களும் ரசிகர்கள் விரும்பும் வகையில் படங்களை தருவார்கள் என்று நம்புகிறேன்.

இந்த படத்தில் மிக சிறந்த நடிகர்களான நாசர், தம்பிராமய்யா, பிரசன்னா, நட்டி என்ற நடராஜ சுப்பிரமணியம், கலையரசன், அமலாபால் ஆகியோர் நடிக்க இருக்கிறார்கள்.

விக்டிம் என்பது ஒரு குற்றச்செயல் நடக்கும்போது அதில் உடல் அளவைவிட, மனதளவிலும் பாதிக்கப்படும் நபரை குறிக்கும் சொல்லாகும். உடல் அளவைவிட மனதளவில் பாதிக்கப் படுவதே மிக கொடுமையானது என்கிறார், தாயாரிப்பாளர் டில்லிபாபு.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com