வேறு தொழில்களில் முதலீடு செய்த நட்சத்திரங்கள்

சினிமாவில், ‘பிஸி’யாக நடித்துக் கொண்டிருந்தாலும், அதில் சம்பாதித்த பணத்தை எல்லாம் புத்திசாலித்தனமாக வேறு தொழில்களில், சில நடிகர்-நடிகைகள் முதலீடு செய்து வருகிறார்கள்.
வேறு தொழில்களில் முதலீடு செய்த நட்சத்திரங்கள்
Published on

சினிமாவில், பிஸியாக நடித்துக் கொண்டிருந்தாலும், அதில் சம்பாதித்த பணத்தை எல்லாம் புத்திசாலித்தனமாக வேறு தொழில்களில், சில நடிகர்-நடிகைகள் முதலீடு செய்து வருகிறார்கள். நடிகர்களில் ஆர்யாவும், சூரியும் ஓட்டல்கள் நடத்துகிறார்கள்.

நடிகைகளில், காஜல் அகர்வால் மும்பையில் செயற்கை நகைகள் செய்யும் கம்பெனி வைத்து இருக்கிறார்.

ஹன்சிகா, விழா நிகழ்ச்சிகளுக்கு பலூன்கள் மற்றும் தோரணங்கள் கட்டி அலங்கரிக்கும் கடையை மும்பையில் நடத்தி வருகிறார். சமந்தா, ஆன் லைனில் ஜவுளி வியாபாரம் செய்கிறார். தனது நிறுவனத்துக்கு அவர், சகி என்று பெயர் சூட்டியிருக்கிறார். சகியில் பெண்களுக்கான உடைகள் விற்கப்படுகின்றன.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com