திடீர் மூச்சுத்திணறல் நடிகர் கார்த்திக் ஆஸ்பத்திரியில் அனுமதி

நடிகர் கார்த்திக் சென்னை போயஸ் கார்டனில் வசித்து வருகிறார். அவருக்கு திடீரென முச்சுத்திணறல் ஏற்பட்டது. இதையடுத்து உடனடியாக ஆம்புலன்ஸ் மூலம் அடையாறு பகுதியில் உள்ள தனியார் ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்று அனுமதித்தனர்.
திடீர் மூச்சுத்திணறல் நடிகர் கார்த்திக் ஆஸ்பத்திரியில் அனுமதி
Published on

நடிகர் கார்த்திக் சென்னை போயஸ் கார்டனில் வசித்து வருகிறார். அவருக்கு திடீரென முச்சுத்திணறல் ஏற்பட்டது. இதையடுத்து உடனடியாக ஆம்புலன்ஸ் மூலம் அடையாறு பகுதியில் உள்ள தனியார் ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்று அனுமதித்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. பல்வேறு பரிசோதனைகளும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. கார்த்திக்குக்கு கொரோனா பரிசோதனையும் செய்யப்பட்டது. அதில் அவருக்கு தொற்று இல்லை என்று வந்துள்ளது. நடிகர் கார்த்திக் தமிழ் திரையுலகில் 1980 மற்றும் 1990-களில் முன்னணி கதாநாயகனாக வலம் வந்தார். தற்போது படங்களில் அவர் வில்லனாகவும், குணசித்திர வேடங்களிலும் நடித்து வருகிறார். மனித உரிமை காக்கும் கட்சி என்ற பெயரிலான அரசியல் கட்சியின் தலைவராகவும் இருக்கிறார். சில தினங்களுக்கு முன்பு தனது கட்சி அ.தி.மு.க கூட்டணியில் தொடர்வதாகவும், சட்டமன்ற தேர்தலில் அ.தி.மு.க கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து பிரசாரத்தில் ஈடுபடப்போவதாகவும் அறிவித்து இருந்தார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com