திருமணம் குறித்து மனம் திறந்த நடிகை டாப்சி

நடிகை டாப்சி, திருமணம் குறித்து மனம் திறந்து பேசியுள்ளார்.
திருமணம் குறித்து மனம் திறந்த நடிகை டாப்சி
Published on

சென்னை,

தமிழ், தெலுங்கு, இந்தியில் அதிக படங்களில் நடித்து முன்னணி கதாநாயகியாக வலம் வரும் டாப்சி, டென்மார்க்கை சேர்ந்த பேட்மிண்டன் வீரர் மத்தியாஸ் போவை காதலித்து திருமணம் செய்து கொண்டார். திருமணத்தை அதிகாரபூர்வமாக அவர் அறிவிக்காமல் இருந்தார். ஆனாலும் மணக்கோலத்தில் இருவரும் இருந்த வீடியோக்கள் வைரலாகி திருமணம் நடந்ததை உறுதி செய்தன.

இந்த நிலையில் நடிகை டாப்சி, திருமணம் குறித்து மனம் திறந்து பேசியுள்ளார். அவர் அளித்துள்ள பேட்டியில்,

நான் திருமணத்தை ரகசியமாக வைக்க விரும்பியதில்லை. ஆனால் இந்த தகவலை வெளிப்படையாக தெரிவித்தால் நிறைய கருத்துகள் வரலாம். மேலும் நான் இதனை தெரிவிக்க மனதளவில் தயாராக இல்லை. என் சகோதரி சாகுன் பன்னுதான் என் திருமண ஏற்பாட்டை செய்தார். திருமணம் பற்றி எந்த கோரிக்கையையும் நான் அவரிடம் கூறவில்லை. அனைத்தையும் அவரே பார்த்துக்கொண்டார். திருமணத்திற்கு குறைவானவர்களே வந்ததால் எந்த விதமான அழுத்தமும் எனக்கு ஏற்படவில்லை. இவ்வாறு கூறினார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com