யோகிபாபு நடித்துள்ள 'தூக்குதுரை' படத்தின் டீசர் வெளியானது..!

யோகிபாபு நடித்துள்ள 'தூக்குதுரை' திரைப்படத்தின் டீசர் வெளியாகி உள்ளது.
யோகிபாபு நடித்துள்ள 'தூக்குதுரை' படத்தின் டீசர் வெளியானது..!
Published on

சென்னை,

டென்னிஸ் மஞ்சுநாத் இயக்கத்தில் யோகிபாபு - இனியா நடிக்கும் படம் 'தூக்குதுரை'. அட்வென்ச்சர் திரில்லர் படமான 'ட்ரிப்' படப்புகழ் டென்னிஸ் மஞ்சுநாத் இயக்கியுள்ள இந்த 'தூக்குதுரை' திரைப்படம், மூன்று விதமான காலங்களில் அதாவது 19-ம் நூற்றாண்டு, 1999 மற்றும் 2022 ஆகிய காலங்களில் கதை நடப்பது போன்று அமைக்கப்பட்டுள்ளது.

இந்த படத்தில் ராஜேந்திரன், மகேஷ், பால சரவணன், சென்றாயன், மாரிமுத்து, நமோ நாராயணன், அஷ்வின், சத்யா, சீனியம்மா, வினோத் தங்கராஜூ, சிந்தாலப்பட்டி சுகி, ராஜா வெற்றி பிரபு மற்றும் பலர் நடித்துள்ளனர். இந்த படத்திற்கு கே.எஸ். மனோஜ் இசையமைக்க, ரவி வர்மா கே ஒளிப்பதிவு செய்துள்ளார். இந்த படத்தை ஓபன் கேட் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது.

இந்த நிலையில், 'தூக்குதுரை' திரைப்படத்தின் டீசர் தற்போது வெளியாகியுள்ளது. இந்த டீசரை நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் தன்னுடைய சமூக வலைதளத்தில் பகிர்ந்துள்ளார். இந்த டீசர் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com