'தள்ளுமாலா' இயக்குநர் படத்தில் இணையும் 'பிரேமலு' நடிகர்

‘பிரேமலு’ படத்தின் மூலம் கவனம் பெற்ற நடிகர் தள்ளுமாலா இயக்குநர் படத்தில் நடிக்கிறார்.
'தள்ளுமாலா' இயக்குநர் படத்தில் இணையும் 'பிரேமலு' நடிகர்
Published on

காலித் ரகுமான் இயக்கத்தில் டோவினோ தாமஸ் நடிப்பில் வெளியான 'தள்ளுமாலா' படம் மிகப் பெரிய வரவேற்பினைப் பெற்றன. இயக்குநர் லோகேஷ் கனகராஜ் அந்தப் படத்தினை இரண்டு முறை பார்த்ததாகக் கூறினார். அனிமல் படத்தின் இயக்குநர் சந்தீப் வங்கா இந்தப் படத்தின் சண்டைக் காட்சிகள் மிகவும் பிடித்ததால் அனிமல் படத்தில் அவருடன் பணியாற்றினேன் என்றார். நஸ்லன், மமிதா பைஜு நடிப்பில் உருவான திரைப்படம் பிரேமலு. 

நகைச்சுவை கலந்த காதல் திரைப்படமாக உருவான பிரேமலு கடந்த பிப்ரவரி மாதம் 9-ம் தேதி திரையரங்குகளில் வெளியானது. இப்படம் இதுவரை உலகளவில் ரூ.100 கோடிக்கும் அதிகமாக வசூலித்து அசத்தியுள்ளது. தமிழ், தெலுங்கு டப்பிங்கில் வெளியாகி நல்ல வரவேற்பைப் பெற்றன..தற்போது பிரேமலு நாயகன் நஸ்லன், காலித் ரஹ்மான் இயக்கத்தில் நடிக்கவிருக்கிறார். இதன் அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. பிளான் பி பிக்சர்ஸ் தயாரிக்கிறது. தள்ளுமாலா இயக்குநர் படம் என்பதால் மலையாளம், தமிழ் ரசிகர்கள் இருவருமே இந்த அறிவிப்பினால் ஆர்வமாகியிருக்கிறார்கள். 

View this post on Instagram

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com