உருவக்கேலிக்கு நடிகை பதிலடி

நடிகை திவ்யா பாரதியை வலைத்தளங்களில் பலர் உருவக்கேலி செய்து வந்தனர். இதற்கு அவர் பதிலடி கொடுத்துள்ளார்.
உருவக்கேலிக்கு நடிகை பதிலடி
Published on

ஜி.வி.பிரகாஷ் ஜோடியாக 'பேச்சிலர்' படத்தில் நடித்து பிரபலமானவர் திவ்யா பாரதி. மதில் மேல் காதல், ஆசை ஆகிய படங்களிலும் நடித்துள்ளார். வெப் தொடர்களிலும் நடிக்கிறார். திவ்யா பாரதியை வலைத்தளங்களில் பலர் உருவக்கேலி செய்து வந்தனர். இதற்கு அவர் பதிலடி கொடுத்துள்ளார். இதுகுறித்து திவ்யா பாரதி இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், "சமீபகாலமாக நான் உருவக்கேலிகளை எதிர்கொண்டு வருகிறேன். எனது உடல் தோற்றம் போலியானது என்றும், எனது இடுப்பு பகுதியில் பேடுகள் வைத்திருக்கிறேன் என்றும், என் இடுப்புக்கு அறுவை சிகிச்சை செய்து இருக்கிறேன் என்றும் சிலர் கேலி பேசுகிறார்கள். நான் எலும்பு கூடுபோல் இருப்பதாகவும் கருத்து தெரிவிக்கின்றனர். கல்லூரி நாட்களிலும் பலர் என்னை உருவக்கேலி செய்துள்ளனர். இந்த கேலிகள் என்னை மிகவும் பாதித்தது. எனது உடலை வெறுக்கும்படியும் செய்தது. மக்கள் முன்னால் செல்ல பயமாக இருந்தது. மாடலிங்கில் நுழைந்து எனது படங்களை வலைத்தளத்தில் வெளியிட ஆரம்பித்ததும் அதை பார்த்து என் உடல் அமைப்பை பாராட்டினர். இது எனக்கு தைரியத்தை கொடுத்தது. ரசிப்பவர்களும், வெறுப்பவர்களும் எப்போதுமே இருக்கிறார்கள். விமர்சனங்களை பொருட்படுத்தாதவரை நாம் வலிமையாகவும், அன்பாகவும் இருப்போம்" என்றார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com