'ஹிட் 3' படத்தில் கேமியோ ரோலில் முந்தைய பாக நடிகர்கள்?


The Buzz Around Hit 3 Guest Roles
x

இப்படம் வருகிற மே மாதம் 1-ம் தேதி திரைக்கு வருகிறது.

சென்னை,

தெலுங்கு திரையுலகில் முன்னணி நடிகராக வலம் வருபவர் நானி. சமீபத்தில், இவர் நடிப்பில் வெளியான படம் 'சூர்யாவின் சனிக்கிழமை'. பிரியங்கா மோகன் கதாநாயகியாக நடித்திருந்த இப்படம் வசூல் ரீதியாகவும் விமர்சனரீதியாகவும் நல்ல வரவேற்பை பெற்றது.

இந்த படத்தை தொடர்ந்து நானி, 'ஹிட் 3' படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தை பிரபல இயக்குனர் சைலேஷ் கொலானு இயக்குகிறார். பிரசாந்தி திபிர்னேனி தயாரிப்பில் உருவாகும் இப்படம் வருகிற மே மாதம் 1-ம் தேதி திரைக்கு வருகிறது.

இந்நிலையில், இப்படத்தின் முந்தைய பாகங்களில் நடித்திருந்த விஷ்வக் சென் மற்றும் அதிவி சேஷ் இதில் கேமியோ ரோலில் நடிப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.


1 More update

Next Story