கவின் நடித்துள்ள “கிஸ்” படத்தின் முழு ஆல்பம் வெளியானது

சதீஷ் இயக்கத்தில் கவின் நடித்துள்ள ‘கிஸ்’ படம் வருகிற 19ந் தேதி வெளியாகிறது.
சென்னை,
'நட்புன்னா என்னானு தெரியுமா', 'லிப்ட்', 'டாடா' உள்ளிட்ட படங்களில் நடித்து மக்கள் மத்தியில் வரவேற்பை பெற்றவர் நடிகர் கவின். கடைசியாக கவின் நடித்திருந்த 'பிளடி பெக்கர்' திரைப்படம் கலவையான வரவேற்பையே பெற்றது.
அதனை தொடர்ந்து பிரபல நடன இயக்குனரான சதீஷ் இயக்கத்தில் கிஸ் என்ற படத்தில் நடித்துள்ளார். இந்த படத்தில் கவினுக்கு ஜோடியாக 'அயோத்தி' படத்தின் மூலம் பிரபலமடைந்த நடிகை பிரீத்தி அஸ்ரானி நடித்துள்ளார். ரோமியோ பிக்சர்ஸ் ராகுல் தயாரிப்பில் உருவாகும் இப்படம் தமிழ், தெலுங்கு , இந்தி உள்ளிட்ட மொழிகளில் வெளியாக உள்ளது.
காதல் கதைக்களத்தை மையமாகக் கொண்டு உருவாகியுள்ள இப்படம் வருகிற 19ந் தேதி உலக அளவில் வெளியாக உள்ளது. இதற்கிடையில் இப்படத்தின் டீசர், டிரெய்லர் மற்றும் பாடல்கள் வெளியாகி வைரலானது. அதனை தொடர்ந்து தற்போது இந்த படத்தில் இடம்பெற்றுள்ள அனைத்து பாடல்களும் அடங்கி முழு ஆல்பம் வெளியிடப்பட்டுள்ளது.






