தி ராஜா சாப்: பிரபாஸின் ஐரோப்பா படப்பிடிப்பு புகைப்படம் கசிவு

இப்படம் ஜனவரி 9 அன்று வெளியாக உள்ளது.
The Raja Saab: Prabhas Europe shooting pics leaked
Published on

சென்னை,

பிரபாஸின் தி ராஜா சாப் பட பணிகள் சிறப்பாக போய்கொண்டிருக்கிறது. தற்போது ஐரோப்பாவில் ஒரு பாடல் படமாக்கப்பட்டு வருகிறது.

இந்நிலையில், அப்படப்பிடிப்பில் இருந்து பிரபாஸின் புகைப்படங்கள் இணையத்தில் கசிந்துள்ளன. அதில் அவர் வண்ணமயமான உடையில், வெளிநாட்டு நடனக் கலைஞர்களுடன் காணப்படுகிறார்.

தி ராஜா சாப் ஒரு திகில் நகைச்சுவை படம். மாருதி இயக்கிய இந்தப் படத்திற்கு தமன் இசையமைத்துள்ளார். இந்தப் படத்தில் நிதி அகர்வால், மாளவிகா மோகனன் மற்றும் ரித்தி குமார் ஆகியோர் கதாநாயகிகளாக நடித்திருக்கின்றனர். இப்படம் ஜனவரி 9 அன்று வெளியாக உள்ளது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com