''ஓஜி'' படம் தள்ளிப்போகவில்லை...வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைத்த படக்குழு


This much-anticipated Telugu film is not getting postponed
x
தினத்தந்தி 4 July 2025 4:45 PM IST (Updated: 4 July 2025 4:46 PM IST)
t-max-icont-min-icon

''ஓஜி'' படம் டிசம்பர் மாதத்திற்கு தள்ளிப்போக உள்ளதாக இணையத்தில் தகவல் பரவி வருகிறது.

சென்னை,

செப்டம்பர் 25-ம் தேதி வெளியாக உள்ள பவன் கல்யாணின் ''ஓஜி'' படம் டிசம்பர் மாதத்திற்கு தள்ளிப்போக உள்ளதாக கடந்த இரண்டு நாட்களாக இணையத்தில் தகவல் பரவி வருகிறது.

பவன் கல்யாணின் மற்றொரு படமான ஹரி ஹர வீரமல்லு படம் வருகிற 24-ம் தேதி வெளியாக உள்ளதால் இரண்டு படங்களுக்கும் இடையில் போதுமான இடைவெளிக்காக இந்த ஒத்திவைப்பு நடைபெறுவதாக வதந்திகள் பரவின.

இந்நிலையில், இந்த வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக, ''ஓஜி'' படம் அறிவித்த தேதியில் வெளியாகும் என்றும் தவறாக தகவல்களை நம்ப வேண்டாம் என்றும் படக்குழு ரசிகர்களைக் கேட்டுக்கொண்டுள்ளது.

சுஜீத் இயக்கிய கேங்ஸ்டர் படமான இதில், எம்ரான் ஹாஷ்மி, பிரியங்கா மோகன், அர்ஜுன் தாஸ், ஸ்ரியா ரெட்டி, பிரகாஷ் ராஜ், ஷாம், ஹரிஷ் உத்தமன், அஜய் கோஷ் மற்றும் பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

1 More update

Next Story