டைட்டானிக் திரைப்பட நடிகர் காலமானார்

பெர்னார்ட் ஹில், டைட்டானிக் படத்தில் கப்பல் கேப்டனாக நடித்திருந்தார்.
டைட்டானிக் திரைப்பட நடிகர் காலமானார்
Published on

நியூயார்க்,

பிரபல ஹாலிவுட் இயக்குனர் ஜேம்ஸ் கேமரூன் தயாரித்து, இயக்கிய படம் டைட்டானிக். ஒரு கப்பலையும், காதலையும் மையமாகக் கொண்டு உலகின் மிகச் சிறந்த ஒரு காதல் காவியமாக எடுக்கப்பட்டது. 1997 ம் ஆண்டில் வெளியான இந்தப் படம், உலகம் முழுவதும் வசூலில் சாதனை படைத்ததோடு ரசிகர்கள் அனைவரின் மனதையும் வென்றது. 

படம் முழுக்க கப்பலை சுற்றியே காட்சிகள் இடம்பெற்றிருக்கும். இந்த கப்பலின் கேப்டனாக ஆங்கில நடிகர் பெர்னார்ட் ஹில் நடித்திருப்பார். டைட்டானிக் படத்தில் நடித்ததன் மூலம் உலகம் முழுவதும் அறியப்படும் நடிகராக மாறினார். மேலும், லார்ட் ஆஃப் தி ரிங்ஸ் உள்ளிட்ட பல திரைப்படங்களில் நடித்து பிரபலமானார்.

இந்த நிலையில், 79 வயதான பெர்னார்ட் ஹில் உடல்நலக்குறைவால் இன்று காலமானார். பெர்னார்ட் ஹில் காலமான செய்தியறிந்து ஹாலிவுட் மட்டுமன்றி உலகம் முழுவதுமுள்ள அவரது ரசிகர்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com