நடிகை தற்கொலை வழக்கில் திருப்பம்...!

நடிகை அபர்ணா நாயர் தற்கொலை வழக்கில் பல புதிய தகவல்கள் வெளியாகி உள்ளது
நடிகை தற்கொலை வழக்கில் திருப்பம்...!
Published on

பிரபல மலையாள நடிகை அபர்ணா நாயர் கடந்த சில தினங்களுக்கு முன்பு திருவனந்தபுரத்தில் உள்ள வீட்டில் தூக்கில் தொங்கி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பரபரப்பானது. இவருக்கு சஞ்சித் என்ற கணவரும், இரண்டு குழந்தைகளும் உள்ளனர்.

தற்கொலை குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வந்த நிலையில், பல புதிய தகவல்கள் வெளியாகி உள்ளது. அபர்ணாவின் தங்கைக்கும், சஞ்சித்துக்கும் இரண்டு வருடங்களுக்கு முன்பு தகாத உறவு இருந்ததாக கூறப்படுகிறது. இதுகுறித்து அபர்ணா போலீசில் புகார் அளித்து சஞ்சித்தை கைது செய்ய வைத்து இருக்கிறார்.

சிறையில் இருந்து வெளியே வந்த சஞ்சித், அபர்ணாவை பழிவாங்கும் நோக்கில் தினமும் குடிபோதையில் வந்து தகராறு செய்ததாகவும், சினிமாவில் நடிக்க தடை விதித்ததாகவும் கூறப்படுகிறது.

இதனால் நடிப்பதை நிறுத்திவிட்டு, ஆஸ்பத்திரியில் வரவேற்பாளராக வேலை பார்த்துள்ளார். ஆனாலும் தினமும் குடித்துவிட்டு வந்து தொல்லை கொடுத்ததால் தற்கொலை முடிவை எடுத்ததாக போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

தற்கொலைக்கு சஞ்சித் தான் காரணம் என்று அபர்ணாவின் தாயார் புகார் அளித்துள்ளார். அபர்ணாவை பாட்டிலால் தலையில் அடித்ததாக அவரது மகளும் சஞ்சித் மீது புகார் தெரிவித்துள்ளார். இதனால் சஞ்சித் கைதாகலாம் என்ற பரபரப்பு ஏற்பட்டு உள்ளது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com