சுறா பட காமெடியை ரீக்கிரியேட் செய்த வடிவேலு...! சமூக வலைதளங்களில் வைரல்...!

நடிகர் வடிவேலுவின் சுறா பட காமெடி ரீகிரியேட் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
சுறா பட காமெடியை ரீக்கிரியேட் செய்த வடிவேலு...! சமூக வலைதளங்களில் வைரல்...!
Published on

சென்னை,

தமிழ்த் திரைப்படத்துறையில் 'வைகைப் புயல்' என அழைக்கப்படும் வடிவேலு அவர்கள், தமிழ் சினிமா உலகில் ஒரு புகழ்பெற்ற நகைச்சுவை நடிகர் மற்றும் பாடகர் ஆவார். நகைச்சுவையில் பல வித்தியாசமான கதாபாத்திரங்களை ஏற்று நடித்து, சினிமா ரசிகர்களை சிரிப்பு என்னும் மாபெரும் கடலில் மூழ்க வைத்தவர். 'ப்ரண்ட்ஸ்', 'வின்னர்', 'சச்சின்', 'சந்திரமுகி', 'மருதமலை', 'கிரி', 'தலைநகரம்', 'இங்கிலிஷ்காரன்', 'காதலன்', 'ராஜகுமாரன்', 'காலம் மாறிப்போச்சு', 'ராசையா', 'பாரதி கண்ணம்மா', 'பாட்டாளி', 'வெற்றிக் கொடி கட்டு', 'மாயி', 'சுந்தரா ட்ராவல்ஸ்', 'கிரி', 'இம்சை அரசன் 23ஆம் புலிகேசி', 'கருப்பசாமி குத்தகைகாரர்', 'போக்கிரி', 'எல்லாம் அவன் செயல்', 'வெடிகுண்டு முருகேசன்' போன்ற எண்ணற்றத் திரைப்படங்கள் இவரின் நகைச்சுவை நடிப்பிற்கு சான்றுகளாகும். நகைச்சுவையில் தனக்கென தனி பாணியை ஏற்படுத்திக் கொண்டு சினிமா ரசிகர்களை சிரிக்க வைத்த அற்புதக் கலைஞன். 'வீச்சருவா வீராசாமி', 'சூனா பானா', 'வைபரேஷன் வடிவேலு', 'செட்டப் செல்லப்பா', 'தீப்பொறி திருமுகம்', 'நாய் சேகர்', 'ஸ்நேக் பாபு', 'படித்துறை பாண்டி', 'என்கவுண்டர் ஏகாம்பரம்', 'பாடி சோடா', 'கந்துவட்டி கருப்பு', 'வண்டு முருகன்', 'அலாட் ஆறுமுகம்', 'ஸ்டையில் பாண்டி' போன்ற பல கதாபாத்திரங்களின் மூலம், எத்தனையோ படங்களில் நகைச்சுவை நடிப்பின் உச்சத்தைத் தொட்டவர். தமது நகைச்சுவைக்கென தனி பாணியை உருவாக்கிக் கொண்டு, பிறர் மனதைப் புண்படுத்தாமல், நகைச்சுவைகளைக் கையாளும் அற்புதக் கலைஞன். ஒரு சில படங்களின் பெயர்கள் கூட தெரியாமல் இருக்கும், ஆனால் இவர் நகைச்சுவை மட்டும் நினைவில் இருக்கும் படங்கள் நிறைய உண்டு எனலாம். அடுத்தவர்களை சந்தோசப்படுத்தி, சிரிக்க வைப்பதில் கிடைக்கும் மகிழ்ச்சிக்கு ஈடு இணை எதுவுமில்லை எனக் கூறலாம். அத்தகைய அற்புதமான கலையை தமது உடல் அசைவுகளாலும், முகபாவனைகளாலும், நகைச்சுவை வசனங்களாலும், சிரிப்பு என்னும் மேடையில் அரங்கேற்றி, ஆறு வயது குழந்தைகள் முதல் அறுபது வயது பெரியவர்கள் வரை தன்னுடைய நகைச்சுவை நடிப்பால் கட்டிப்போட்ட வைகைப்புயல் வடிவேலு

1988ம் ஆண்டு வெளியான என் 'தங்கை கல்யாணி' படத்தின் மூலம் தனது முகத்தை மக்களுக்கு முதல்முறையாக காட்டினார் வடிவேலு. தற்போது இயக்குநர் பி.வாசு இயக்கத்தில் சந்திரமுகி 2 படத்தில் நடித்து வருகிறார். இதில் ராகவா லாரன்ஸ், ராதிகா சரத்குமார் உள்ளிட்ட பலர் நடித்து வருகின்றனர்.

இப்படத்திற்கான படப்பிடிப்பு வேலைகள் மைசூரில் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் படப்பிடிப்பு தளத்தில் நடிகர் வடிவேறு சுறா படத்தின் கச்சேரி சீனை ரீக்கிரியேட் செய்துள்ளார். இதை வீடியோ எடுத்த நடிகை ராதிகா தனது சமூகவலைதளத்தில் பதிவிட்டுள்ளார்.

மேலும் நடிகர் வடிவேலு செய்யும் காமெடி எந்த படத்தில் இடம்பெறும் என்ற கேள்வியும் கேட்டுள்ளார். தற்போது இந்த சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com