விமலின் “மகாசேனா” படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியீடு


விமலின் “மகாசேனா” படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியீடு
x
தினத்தந்தி 11 Oct 2025 6:51 PM IST (Updated: 11 Oct 2025 6:55 PM IST)
t-max-icont-min-icon

விமல், யோகிபாபு நடிக்கும் ‘மகாசேனா’ படத்தின் முதல் கட்ட படப்பிடிப்பு கூடலூர் அருகே உள்ள சந்தன மலைப்பகுதியில் நடைபெற்றது.

சென்னை,

நடிகர் விமல் பசங்க படத்தின் மூலம் அறிமுகமாகி 'களவாணி, கேடி பில்லா கில்லாடி ரங்கா, கலகலப்பு' போன்ற வெற்றி படங்களில் நடித்து ரசிகர்கள் மனதில் நீங்கா இடம் பிடித்தார். இவரது நடிப்பில் 'சார்' படம் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது. அதனை தொடர்ந்து 'பரமசிவன் பாத்திமா' என்ற படத்தில் நடித்திருந்தார். விலங்கு வெப் தொடரை அடுத்து வெப் தொடர்கள் மற்றும் சில படங்களிலும் கமிட் ஆகி நடித்து வருகிறார்.

இயக்குனர் எழில் இயக்கத்தில் 'தேசிங்குராஜா' நடித்திருந்தார். வரவேற்பைப் பெற்ற இந்தப் படத்தின் அடுத்த பாகமான 'தேசிங்குராஜா 2' உருவாகி வருகிறது. அதே சமயம் தேசிங்கு ராஜா 2 படமானது முதல் பாகத்தில் இருந்து வித்தியாசமான கதைக்களத்திலும் முதல் பாகத்தை போல் காமெடி கலந்த கதைக்களத்திலும் தயாராகி வருகிறது. இந்த படத்தில் விமல் தவிர குக் வித் கோமாளி புகழ், ரவி மரியா, ஹர்ஷிதா போன்றோர் நடிக்கின்றனர்.

விமல், சிருஷ்டி மற்றும் யோகி பாபு ஆகியோர் முதன்மை கேரக்டர்களில் நடித்து வரும் ‘மகாசேனா’ என்ற படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் துவங்கப்பட்டது. கூடலூர் அருகே உள்ள சந்தன மலைப்பகுதியில் இந்த படத்தின் முதல் கட்ட படப்பிடிப்பு நடைபெற்றது.

இந்நிலையில், விமல் நடிக்கும் ‘மகாசேனா’ படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரை படக்குழு வெளியிட்டுள்ளது.

1 More update

Next Story