

சென்னை
அரசுடன் பொதுமக்கள் இணைந்து செயல்பட வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளார் குஷ்பு. இதுதொடர்பாக அவர் டுவிட்டரில் வெளியிட்டுள்ள தகவலில் கூறி இருப்பதாவது:-
தமிழக மக்கள் அனைவரும் மு.க.ஸ்டாலின் தலைமையிலான அரசுக்கு ஒத்துழைப்பு அளித்து இணைந்து செயல்பட வேண்டும். கொரோனோவுக்கு எதிரான போரில் அரசால் மட்டும் எல்லாவற்றையும் செய்ய முடியாது. மக்களின் பங்கும் முக்கியமானது. நம்மால் முடிந்த ஒத்துழைப்பை நாம் அளிப்போம். சிறு துளி பெருவெள்ளமாகும் என்று கும்பிட்ட கை போட்ட ஸ்மைலியுடன் அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.