உலக பொருளாதாரத்தை மேம்படுத்தும் இந்தியப் பெண்

உலக பொருளாதாரத்தில் மாற்றங்களை ஏற்படுத்திய ‘கிரிப்டோ கரன்சி’ பற்றிய கீதா கோபிநாத்தின் பேச்சு, இந்தியர்களால் மட்டுமில்லாமல் உலக நாடுகளாலும் கவனிக்கப்பட்டது.
உலக பொருளாதாரத்தை மேம்படுத்தும் இந்தியப் பெண்
Published on

ர்வதேச நாணய நிதியத்தின் துணை நிர்வாக இயக்குனராக, இந்திய வம்சாவளியைச் சேர்ந்த கீதா கோபிநாத் செயல்பட்டு வருகிறார். கேரளாவை பூர்வீகமாக கொண்ட இவர், கொல்கத்தாவில் 1981-ம் ஆண்டு பிறந்தார். நடுத்தரக் குடும்பத்தில் பிறந்து வளர்ந்த இவர், இன்று தனது செயல்பாடுகளால் இந்திய நாட்டுக்கே பெருமை சேர்த்துள்ளார். வாழ்வில் முன்னேறுவதற்கு முயற்சிக்கும் பெண்களுக்கு உதாரணமாக விளங்குகிறார்.

இளங்கலை பொருளாதார படிப்பை டெல்லியில் முடித்தவர், முதல் முதுகலை பட்டத்தை டெல்லியிலும், இரண்டாம் முதுகலை பட்டத்தை 1996-ம் ஆண்டு வாஷிங்டன் பல்கலைக்கழகத்திலும் முடித்தார். 2001-ம் ஆண்டு பொருளாதாரத்துக்கான முனைவர் பட்டத்தை பிரின்ஸ்டோன் பல்கலைக்கழகத்தில் பெற்றார். மேலும் அந்த பல்கலைக்கழகத்தில் மூன்று சிறப்பு ஆராய்ச்சி கட்டுரைகளை வெளியிட்டதோடு மட்டுமில்லாமல், தனது ஆராய்ச்சிகளுக்காக சிறப்பு விருதுகளையும் பெற்றுள்ளார்.

2018-ம் ஆண்டு சர்வதேச நாணய நிதியத்தில் தலைமை பொருளாதார வல்லுநராக நியமிக்கப்பட்டார்.

இவரது கணவர் இக்பால் சிங்; இந்த தம்பதியினருக்கு ரோகில் என்ற மகன் உள்ளார்.

சமீபத்தில் உலக பொருளாதாரத்தில் மாற்றங்களை ஏற்படுத்திய கிரிப்டோ கரன்சி பற்றிய கீதா கோபிநாத்தின் பேச்சு, இந்தியர்களால் மட்டுமில்லாமல் உலக நாடுகளாலும் கவனிக்கப்பட்டது. நேஷனல் கவுன்சில் ஆப் அப்ளைடு எக்னாமிக் ரிசர்ச் எனும் அமைப்பு நடத்திய நிகழ்ச்சியில் பேசிய இவர், உலக நாடுகள் கிரிப்டோ கரன்சியை தடை செய்வதற்குப் பதிலாக, அதை ஒழுங்குபடுத்துவதற்கான சட்டங்களை இயற்ற வேண்டும் என்று கூறினார்.

மேலும் அவர் உலக நாடுகள் தனியாக இந்த பிரச்சினைகளுக்கு தீர்வு காண முடியாது எனவும், இந்தச் சிக்கலுக்கு உலக நாடுகள் இணைந்து தீர்வு காண முடியும். கிரிப்டோ கரன்சி பரிவர்த்தனைகள் எல்லையற்றவை. அதற்கு உடனடியாக உலகளாவிய சட்டம் தேவை எனவும் கூறினார்.

பொருளாதாரத்தில் உலக நாடுகளுக்கு வழிகாட்டும் அளவுக்கு தன்னை வளர்த்து கொண்டுள்ள கீதா கோபிநாத்திற்கு, இந்தியா மற்றும் அமெரிக்கா முழுமைக்குமான விசா அளித்து கவுரவிக்கப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com