இந்து சமய அறநிலையத்துறை வேலை: சென்னையில் பணியிடம்- உடனே விண்ணப்பிங்க

சென்னை வியாசர்பாடியில் உள்ள அருள்மிகு சிவப்பரகாச மடாலயத்தில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
இந்து சமய அறநிலையத்துறை வேலை: சென்னையில் பணியிடம்- உடனே விண்ணப்பிங்க
Published on

சென்னை,

தமிழக அரசின் இந்து சமய அறநிலையத்துறை சென்னை வியாசர்பாடியில் உள்ள அருள்மிகு சிவப்பரகாச மடாலயத்தில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியிட்டுள்ளது. இது குறித்த விவரம் வருமாறு;

பணியிடங்கள் விவரம் : எழுத்தர், அலுவலக உதவியாளர், மடப்பள்ளி, காவலர், திருவலகு என மொத்தம் 5 பணியிடங்கள்

சம்பளம் : பணியிடத்திற்கு தகுந்தபடி மாறுபடும். அதிகபட்சமாக எழுத்தர் பணிக்கு ரூ.15,700 முதல் ரூ.50,000 வரை வழங்கப்படும்.

கல்வி தகுதி : எழுத்தர் பணிக்கு எட்டாம் வகுப்பு தேர்ச்சி போது, மடப்பள்ளி தவிர இதர பணியிடங்களுக்கு தமிழில் எழுத படிக்க தெரிந்தால் போதும்.

இதர விவரங்கள்: விண்ணப்பதாரர் 01.07.2025 அன்று 18 வயது பூர்த்தியடைந்தவராகவும் 45 வயதுக்கு உட்பட்டவராகவும் இருத்தல் வேண்டும். பணியிட விவரங்களுக்கான கல்வித் தகுதி, வயது வரம்பு, நிபந்தனைகள் மற்றும் இதர விவரங்களை அலுவலக வேலை நேரங்களில் நேரில் கேட்டுத் தெரிந்து கொள்ளலாம். விண்ணப்பப் படிவம் மற்றும் நிபந்தனைகளை vadapalaniandavar.hrce.tn.gov.in மற்றும் hrce.tn.gov.in ஆகிய இணையதளங்களிலும் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களைத் துணை ஆணையர் / செயல் அலுவலர், அருள்மிகு வடபழநி ஆண்டவர் திருக்கோயில், வடபழநி, சென்னை-26 என்ற முகவரிக்கு அனுப்ப வேண்டும். பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் வந்து சேர வேண்டிய கடைசி நாள் 19.07.2025 அன்று மாலை 5.45 மணி வரை மட்டுமே பெற்றுக் கொள்ளப்படும். அதன் பின்னர் வரப்பெறும் விண்ணப்பங்கள் ஏற்றுக் கொள்ளப்படமாட்டாது. முழு விவரங்களை தேர்வு அறிவிப்பில் தெரிந்து கொள்ளலாம்.

தேர்வு அறிவிப்பினை படிக்க: https://hrce.tn.gov.in/resources/docs/hrcescroll_doc/137/document_1.pdf

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com