காங்கிரஸ் ஆட்சியின் போது 6 சர்ஜிக்கல் ஸ்டிரைக், தேதி விபரம் வெளியீடு

எங்கள் ஆட்சியின் போது 6 சர்ஜிக்கல் ஸ்டிரைக் நடத்தப்பட்டது என காங்கிரஸ் தலைவர் தேதியை வெளியிட்டுள்ளார்.
காங்கிரஸ் ஆட்சியின் போது 6 சர்ஜிக்கல் ஸ்டிரைக், தேதி விபரம் வெளியீடு
Published on

இந்தியாவில் பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தும்போது எல்லாம் என்னுடைய அரசு எல்லைத் தாண்டிச் சென்று பயங்கரவாத முகாம்கள் மீது சர்ஜிக்கல் ஸ்டிரைக் நடத்துகிறது என பிரதமர் மோடி கூறி வருகிறார். காங்கிரஸ் ஆட்சியின்போது ராணுவத்திற்கு சுதந்திரம் கொடுக்கப்படவில்லை எனவும் குற்றம் சாட்டினார்.

முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங், காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசு மத்தியில் ஆட்சியில் இருந்தபோது பல்வேறு கால இடைவெளிகளில் பல்வேறு சர்ஜிக்கல் ஸ்டிரைக் நடத்தப்பட்டது, எங்களைப் பொறுத்தவரையில் ராணுவ நடவடிக்கை என்பது ஒரு வியூக நடவடிக்கையாக இருந்தது. இந்தியாவிற்கு எதிரான படைகளுக்கு எதிராகவே மேற்கொண்டோம், ஆனால் அதனை வாக்குகளை பெறுவதற்காக பயன்படுத்தவில்லை எனக் கூறினார்.

இந்நிலையில் எங்கள் ஆட்சியின்போது 6 சர்ஜிக்கல் ஸ்டிரைக் நடத்தப்பட்டது என காங்கிரஸ் தலைவர் தேதியை வெளியிட்டுள்ளார். காங்கிரஸ் தலைவர் ராஜூவ் சுக்லா செய்தியாளர்களிடம் பேசுகையில், முதல் தாக்குதல் ஜூன் 19, 2008-ல் பூஞ்சின் பாத்தால் செக்டாரில் நடத்தப்பட்டது. இரண்டாவது தாக்குதல்

ஆகஸ்ட் 30-செப்டம்பர் 1, 2011-ல் நீலம் ஆற்றுப்படுகையில் உள்ள சார்தா செக்டாரில் நடத்தப்பட்டது. ஜனவரி 6, 2013-ல் சுவான் பாத்ரா செக்போஸ்ட் பகுதியில் நடத்தப்பட்டது. மற்றொரு தாக்குதல் ஜூலை 27 மற்றும் ஜூலை 28, 2013-ல் நசாபியர் செக்டாரில் நடத்தப்பட்டது. ஐந்தாவது தாக்குதல் நீலம் பள்ளத்தாக்கில் ஆகஸ்ட் 6, 2013ல் நடத்தப்பட்டது, ஆறாவது தாக்குதல் ஜனவரி 14, 2014-ல் நடத்தப்பட்டது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

காங்கிரஸ், நாங்களும் சர்ஜிக்கல் ஸ்டிரைக் நடத்தினோம் என்று கூறுவது இது முதல்முறை கிடையாது. இப்போது தேதி விவரங்களை வெளியிட்டுள்ளது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com