

புதுச்சேரி,
புதுச்சேரியில் கடந்த சில நாட்களாக கொரோனா பாதிப்பு எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இதனை கட்டுப்படுத்த முதல் அமைச்சர் நாராயணசாமி தலைமையிலான அரசு தீவிர முனைப்புடன் செயல்பட்டு வருகிறது.
இந்நிலையில் இன்று புதுச்சேரியில் கடந்த 24 மணி நேரத்தில் மேலும் 91 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளதாக அம்மாநில சுகாதாரத்துறை தகவல் தெரிவித்துள்ளது. இதனால் மாநிலத்தில் மொத்த பாதிப்பு எண்ணிக்கையானது 2,179 ஆக உயர்ந்து உள்ளது. இன்று தொற்று உறுதி செய்யப்பட்டதில் புதுச்சேரியில் 90 பேரும், காரைக்காலில் ஒருவரும் ஆவர்.
இன்று கொரோனா தொற்றால் முதியவர் ஒருவர் உயிரிழந்துள்ளார். இதனால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 30 ஆக உயர்ந்துள்ளது. மேலும் கடந்த 24 மணி நேரத்தில் மேலும் 53 பேர் நோய்தொற்றிலிருந்து குணமடைந்துள்ளனர். இதன் மூலம் குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 1,318 ஆக உயர்ந்துள்ளது. தற்போது வரை 832 பேர் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
கொரோனா பரவல் தொடர்ந்து அதிகரித்து வருவதால் புதுச்சேரி மாநில மக்கள் சமூக இடைவேளி மற்றும் முககவசம் அணிந்து செல்லுமாறு அம்மாநில சுகாதாரத்துறை அறிவுறித்தியுள்ளது.