பாபர் மசூதி இடிப்பு தினம்: கோவில்கள், ரெயில் நிலையங்களில் போலீசார் தீவிர சோதனை

பாபர் மசூதி இடிப்பு தினத்தையொட்டி நேற்று தமிழகம் முழுவதும் அசம்பாவித சம்பவங்கள் எதுவும் நடைபெறாமல் இருக்க போலீசார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டனர்.
பாபர் மசூதி இடிப்பு தினம்: கோவில்கள், ரெயில் நிலையங்களில் போலீசார் தீவிர சோதனை
Published on

திருவள்ளூர்,

திருவள்ளூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அரவிந்தன் உத்தரவின் பேரில் நேற்று திருவள்ளூர் துணை போலீஸ் சூப்பிரண்டு கங்காதரன் தலைமையில் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர்கள் வாசுதேவன், மதியழகன் மற்றும் போலீசார் 108 திவ்யதேசங்களில் ஒன்றான திருவள்ளூர் வீரராகவ பெருமாள் கோவிலுக்கு வரும் பக்தர்களை தீவிர சோதனை செய்த பின்னரே உள்ளே செல்ல அனுமதித்தனர்.

அதேபோல போலீசார் திருவள்ளூர் பஸ் நிலையம், ரெயில் நிலையம் போன்றவற்றிலும் தீவிர சோதனையில் ஈடுபட்டனர். திருவள்ளூர் மாவட்டத்தில் மக்கள் அதிகம் கூடும் இடங்கள், கோவில்கள், ரெயில் நிலையங்கள் என பல்வேறு பகுதிகளில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு போலீசார் தீவிர சோதனையில் ஈடுபட்டனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com