

இதையடுத்து நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் ககன்தீப் சிங் பேடி கூறியதாவது:-
சென்னையில் கடந்த ஒரு மாதமாக மாநகராட்சியின் சுகாதாரத்துறை அலுவலர்களால் பிளாஸ்டிக் பைகள் பயன்படுத்திய கடைகளுக்கு ரூ.3 லட்சம் வரை அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. பொதுமக்கள், கடைகளில் காய்கறி பழங்கள் வாங்கும் போது. பிளாஸ்டிக் பைகளை தவிர்த்து துணி பைகளை பயன்படுத்த வேண்டும் என கூட்டத்தில் தெரிவித்தோம். அதற்கு 2 மாத காலம் வரை அவகாசம் வேண்டும் என வியாபாரிகள் தெரிவித்தனர். ஆனால் 10 நாட்கள் மட்டுமே அவர்களுக்கு அவகாசம் வழங்கப்பட்டுள்ளது. இல்லையென்றால் கடைகள் மீது நடவடிக்கை எடுக்கப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.