

ஓசூர்,
கிருஷ்ணகிரி மாவட்டம் பேரிகை பக்கமுள்ள அத்திமுகம் கிராமத்தில் வெறிநாய் ஒன்று சுற்றித் திரிந்தது. இந்த நாய் நேற்று சாலையில் சென்றவர்களை விரட்டி கடித்தது. இதில் அதேபகுதிய சேர்ந்த நாராயணசாமி (வயது 45), முனியப்பா (55), அர்பின் ராஜ் (12), அகில் (8), சரஸ்வதி (10) உள்பட 10 பேர் காயமடைந்தனர். இவர்கள் அங்குள்ள ஆரம்ப சுகாதார நிலையத்தில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர். இதில் 2 பேர் மேல் சிகிச்சைக்காக கிருஷ்ணகிரி அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்படுகிறது. இந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.